பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கிணங்க, ஈரானுடனான போர்நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டிக்கும் என்றும், ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடரும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
“ஈரான் அரசாங்கம் கடுமையாக பிளவுபட்டுள்ளதைக் கருத்தில் கொண்டும் (இது எதிர்பாராதது அல்ல), பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், ஈரானியத் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை (unified proposal) முன்வைக்கும் வரை ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு எங்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
எனவே, முற்றுகையைத் தொடருமாறும், மற்ற அனைத்து அம்சங்களிலும் தயார் நிலையில் இருக்குமாறும் நான் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்களின் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்கள் ஒரு முடிவுக்கு வரும் வரை போர்நிறுத்தம் நீடிக்கப்படும்