ஈகச்சுடர் திலீபன் சிலை அகற்றம்: சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது

ஈழமண்ணில் ஈகச்சுடர் திலீபனின் திருவுருவச் சிலையை சிங்கள -பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் இன்று (செப்டம்பர் 27) அகற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், நல்லூரில் சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களால் நிறுவப்பட்ட அச்சிலையை, தமது ஆதிக்கவெறியை வெளிப்படுத்தும் வகையில் சிங்களக் காவல்துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர். அதிபர் அனுர திசநாயக அரசின் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

1987 ஆம் ஆண்டு செப்டர் 26 அன்று ஈகச்சுடர் திலீபனின் இன்னுயிர் மூச்சு அடங்கியது.
இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து துளி வன்முறைக்கும் இடமின்றி அறவழியில் 12 நாட்கள் உண்ணாநிலையில் கடும் தவமிருந்த திலீபன், தனது மகத்தான ஈகத்தால் உலகின் கவனத்தை ஈர்த்தார். அவர் ஆயுதப் பயிற்சி பெற்ற ஒரு போராளியாயிருந்தும், வன்முறையில்லா அறவழியில் போராடும் துணிவையும் வலுவையும் கொண்டிருந்தார். அதன் மூலம் வெகுமக்களின் பேரன்பை வென்றெடுத்தார். மேதகு பிரபாகரன் அவர்களின் வணக்கத்திற்குரியவர் என்னும் பேறு பெற்றார்.

அத்தகைய மக்கள் போராளியை நன்றிப் பெருக்கோடு உலகெங்கும் தமிழ் மக்கள் கடந்த 39 ஆண்டுகளாக நினைவுகூர்ந்து வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஈழத்திலும் தமிழ்மக்கள் அவரது திருவுருவச் சிலையை நிறுவி அவருக்குத் தமது நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் இந்த உணர்வைக் காயப்படுத்தும் வகையிலும் அவர்களை அச்சுறுத்தி ஒடுக்கும் வகையிலும் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் அவரது சிலையை அப்புறப்படுத்தியிருப்பது அவர்களின் உண்மை முகத்தை உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளது. இவர்கள் இடதுசாரிகள், முற்போக்கானவர்கள் என்கிற தோற்றம் உண்மையல்ல என்பதை உலக மாந்தருக்கு உணர்த்தியுள்ளது.

லெப். கேணல் திலீபனின் சிலையை அவர்கள் எம் மண்ணிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம் ; ஆனால், அவரைத் எம் மக்களின் நெஞ்சத்திலிருந்து ஒருபோதும் அகற்றிவிட முடியாது!

எமது திலீபன் கனவு ஒருநாள் நனவாகும் என்கிற நம்பிக்கையோடு உலகத் தமிழர்கள் யாம்ஒருங்கிணைந்து களமாடுவோம்!

இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.

1200-675-24723167-thumbnail-16x9-velmurugan (1)

தியாகதீபம் திலீபன் நினைவேந்தலைச் சிதைக்கும் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது !

September 28, 2026

தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி. தமிழர்களின் உரிமைகளுக்காகத் தனது உயிரையே தியாகம் செய்த தியாகதீபம் திலீபன் அவர்களின்

anojan

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு – தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவுதி அரசிற்கு கூட்டாக கடிதம்

September 28, 2026

சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் இளைஞன் அனோஜன் சிவராஜாவிற்கு சவுதி அரேபிய பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என தமிழ் முஸ்லீம்

Tilvin-Silva

அரசாங்கத்திற்கு ஒரு கனா உள்ளது: JVP பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

September 28, 2026

கொழும்பு — மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) அரசியல் பயணத்தின் மையப்புள்ளியாக விளங்கி வரும் பொதுச்செயலாளர்

6782fb3c716c261e919e414f97ff66c2

“யாழ்ப்பாணத்தில் காருக்குள் காத்திருந்த ஷாக்!” – கட்டுக்கட்டான பெருந்தொகைப் பணம், கூரிய ஆயுதங்களுடன் பெண் உட்பட 9 பேர் அதிரடிக் கைது!

September 28, 2026

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் பெருந்தொகைப் பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேரை யாழ்ப்பாணப் பொலிஸார் அதிரடியாகக்

3

“திலீபனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்!” – சிலை அகற்றிய விவகாரத்தில் முட்டி மோதும் தமிழ்த் தரப்புகளுக்கு ந. பொன்ராசா கண்டனம்!

September 28, 2026

யாழ்ப்பாணம்: தமிழினம் இறைவனாக மதித்துப் போற்றும் திலீபனை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சமூகச் செயற்பாட்டாளர்

2

“இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!” – பொதுமக்களுக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அவசர அறிவுறுத்தல்!

September 28, 2026

கொழும்பு: இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அவசர

26-6ab00609bf886

“சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் விவகாரம்!” – அவசரமாக சவூதி அரேபியா செல்லும் அரசியல் பிரதிநிதிகள் குழு!

September 28, 2026

கொழும்பு: சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்க, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின்

**EDS: SCREENGRAB VIA PTI VIDEOS** Chennai: VCK leader Thol Thirumavalavan talks to the media, after his party received a request from TVK for support to form the Tamil Nadu government following the recent Assembly elections, in Chennai, Thursday, May 7, 2026. (PTI Photo) (PTI05_07_2026_000160B)

ஈகச்சுடர் திலீபன் சிலை அகற்றம்: சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது

September 28, 2026

ஈழமண்ணில் ஈகச்சுடர் திலீபனின் திருவுருவச் சிலையை சிங்கள -பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் இன்று (செப்டம்பர் 27) அகற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், நல்லூரில்

achchuvel

அச்சுவேலி சிறுவர் சீர்திருத்த பாடசாலை சம்பவம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

September 28, 2026

அச்சுவேலி பகுதியில் இயங்கிவரும் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூரமான சம்பவம் தொடர்பான காணொளியொன்று கடந்த சில தினங்களாக

uk chi

வடக்கு லண்டனில் இலங்கை வம்சாளி சிறுமி விபத்தில் பலி

September 28, 2026

வடக்கு லண்டனில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பரிதாபமாக

nada

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனிலிருந்து இந்தியா வரை மனிதநேய நடைப்பயணம்!

September 28, 2026

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி, பிரித்தானியாவின் லண்டனிலிருந்து இந்தியா வரை முன்னெடுக்கப்படவுள்ள மனிதநேய நடைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூரில்

ne

அனோஜனுக்கு மனிதநேய அடிப்படையில் மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்!

September 28, 2026

சவூதி அரேபியாவில் கைதியாக சிறைபிடிக்கப்பட்ட இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராஜா அனோஜனை மனிதநேய அடிப்படையில் மரண