இளவரசர் ஹாரி – மேகன் தம்பதி பிரித்தானியா திரும்புகின்றனர்!

பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி மீண்டும் பிரித்தானியாவுக்கு இடம்பெயரத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய நாளிதழான ‘தி டெலிகிராஃப்’ வெளியிட்ட தகவலின்படி, இளவரசர் ஹாரியும் மேகனும் இம்மாத பிற்பகுதியில் அமெரிக்காவிலிருந்து லண்டனுக்கு வெளியே உள்ள ஒரு தனியார் இல்லத்துக்கு இடம்பெயரத் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், எதிர்வரும் கல்வித் தவணைக்காக தங்களது குழந்தைகளான ஆர்ச்சி (வயது 7) மற்றும் லிலிபெட் (வயது 5) ஆகியோரை பிரித்தானியப் பாடசாலைகளில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெயர்வது தொடர்பான திட்டம் குறித்து மன்னர் சார்லஸுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையே (16) முதன்முதலில் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை மாதம் இந்தத் தம்பதியினர் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட குடும்ப விஜயத்தின்போது இது குறித்து பேசப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை என்பதை இது காட்டுகிறது. இருப்பினும், அரச குடும்பத்தினரைத் தனிப்பட்ட முறையில் அடிக்கடி சந்திப்பதற்கான வாய்ப்பை மன்னர் சார்லஸ் வரவேற்பதாக கூறப்படுகிறது.

அத்துடன், ஹாரி – மேகன் தம்பதி அரச குடும்பத்தில் பணியாற்றும் உறுப்பினர்களாக அல்லாமல், தனிப்பட்ட நபர்களாகவே தொடர்வார்கள் என்றும் அவர்களின் பொறுப்புகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் மன்னர் சார்ல்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போது கலிபோர்னியாவில் வசித்து வரும் இந்தத் தம்பதியினர், அரச குடும்பப் பொறுப்புகளில் இருந்து விலகிய பிறகு 2020ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி வட அமெரிக்காவுக்குச் சென்றனர். அதன் பிறகு அரச குடும்பத்துடன் இவர்களுக்கு இடையே பகிரங்கக் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. பத்திரிகையாளர்களின் தேவையற்ற தலையீடு, பிரித்தானிய நிறுவனங்களில் நிலவும் இனவெறி, இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இடையிலான சிக்கலான உறவுகள் ஆகியவையே தங்களது வெளியேற்றத்துக்கு முக்கியக் காரணங்கள் என ஹாரியும் மேகனும் முன்னதாக குறிப்பிட்டிருந்தனர்.

அரச வாழ்க்கையிலிருந்து விலகிய போதிலும், 2022இல் தனது பாட்டியான ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு மற்றும் அதற்கடுத்த ஆண்டில் தனது தந்தை மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்காக ஹாரி பல முறை பிரித்தானியாவுக்குச் சென்று வந்துள்ளார்.

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109