இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் தீபச்செல்வன் முறைப்பாடு

இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தியாவில் இருந்து தீபச்செல்வனுக்கு முகவரி இடப்பட்டு அனுப்பப்பட்ட ஐந்து வகையான புத்தகங்களின் 360 பிரதிகள் இலங்கை சுங்கத் திணைக்களம் கடந்த மார்ச் 18ஆம் திகதி முதல் தடுத்து வைத்துள்ளது.
இது தொடர்பில் எழுத்தாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்த தீபச்செல்வன் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துகள் எனது புத்தகத்தில் உள்ளதாகவும் பாதுகாப்பு மற்றும் கலாச்சார அமைச்சின் அனுமதி உடன் புத்தகங்கள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அந்நிலையில்இ கடந்த 17ஆம் திகதி கலாச்சார அமைச்சில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
அதில்இ எனது இலக்கிய எழுத்துச் செயற்பாடுகள் குறித்தும் குறித்த புத்தகங்களினுடைய முக்கியத்துவம் குறித்தும் எனது கருத்துக்களையும் தெரிவித்தேன்.
இலங்கை கலைக் கழகத்தின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் என் சார்பில் சிங்கள தமிழ் எழுத்தாளர்களும் சட்டத்தரணியும் கலந்து கொண்டனர்.
எனினும் புத்தகங்கள் என்ன காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை இதன்போது குறிப்பிடவில்லை.
புத்தகங்கள் விடுவிக்கப்படும் என எதிர்பார்த்து சென்ற வேளையில் புத்தகங்கள் தொடர்பில் இந்த தீர்வும் கிடைக்கவில்லை.
இதற்காக சிங்கள படைப்பாளிகள் இளைஞர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கம் சில மூத்த சிங்கள எழுத்தாளர்களை வைத்து இந்த புத்தக தடுப்புக்கு நியாயத்தை கற்பிக்க முயல்கிறது.
அதில் ஒரு சிங்கள எழுத்தாளர் தனக்கு தமிழ் தெரியாது என்றும் என்னுடைய புத்தகங்களை வாசிக்கவில்லை என்றும் ஆனால் இவற்றில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு தரும் விடயங்கள் உள்ளன என்றும் கூறுவது எந்த வகையில் ஏற்படையது?
புத்தகத்தை வாசிக்காமல் இவ்வாறு கருத்து கூறுகிறார்கள். இதுவே இனவாதமும் பாரபட்சமும் ஆகும்.
இந்த நிலையில் உடனடியாக என்னுடைய புத்தகங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இது என் மீதான அடிப்படை மனித உரிமை மீறல் என்பதினாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

machete

ஜோர்ஜியன் மாலில் கத்தியுடன் மிரட்டிய விவகாரம்: 16 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு

April 21, 2026

ஒண்டாரியோவின் பாரி நகரில் உள்ள ஜோர்ஜியன் மாலில் கடந்த மாதம் இடம்பெற்ற மோதலின் போது, கத்தியுடன் (Machete) சிலரைத் துரத்திச்

ananda

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் விரைவில் நிறைவடையும்: அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

April 21, 2026

உயிர்த்த ஞாயிறுஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்படும் என பொது பாதுகாப்பு மற்றும்

default (3)

2 நாட்களாக மருத்துவமனையில் காத்திருந்து உயிரிழந்த பூர்வீகக்குடியை சேர்ந்த பெண்: இது ஒரு ‘கொலை’ எனத் தீர்ப்பளிக்கக் கோரும் குடும்பத்தினர்

April 21, 2026

கனடாவின் ஒண்டாரியோவில் உள்ள மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சைக்காகக் காத்திருந்து, இறுதியில் முறையான கவனிப்பின்றி உயிரிழந்த பூர்வீகக்குடியை சேர்ந்த பெண்ணான

hungary pm

நெதன்யாகு ஹங்கேரிக்கு வந்தால் கைது செய்வோம்: புதிய பிரதமர் பீட்டர் மக்யார் அதிரடி

April 21, 2026

ர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து ஹங்கேரி விலகும் முடிவை தாம் நிறுத்தப்போவதாக ஹங்கேரியின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள பீட்டர்

Screenshot

இலங்கைக்கருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை: பென்டகன் அறிவிப்பு

April 21, 2026

ஆசியக் கடற்பரப்பில் ஈரானிய எண்ணெய் கப்பல் (Oil Tanker) ஒன்றில் அமெரிக்கப் படைகள் ஏறிச் சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத்

tn-chief-electoral-officer-archana-patnaik-has-said-sir-forms-have-been-6-16-crore-people-in-tamil-nadu

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: உடனடியாக அமலுக்கு வந்த கெடுபிடிகள்! மீறினால் 2 ஆண்டு சிறை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு

hwar

வடக்கு மாகாண ஆளுநருடன் யாழ். கட்டளை தளபதி சந்திப்பு

April 21, 2026

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர்

Diana

முன்னாள் அமைச்சர் டயனா கமகேயிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

April 21, 2026

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை

heat

சிவப்பு எச்சரிக்கை!

April 21, 2026

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘கவனம்

ddsfd

கடும் மழை காரணமாக சுமார் 50 தோட்ட வீடுகள் நீரில் மூழ்கின!

April 21, 2026

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இன்று (21) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, டிக்கோயா போடைஸ் தோட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளில்

war

இந்திய போர்க்கப்பல் கொழும்பு வந்தது

April 21, 2026

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், ‘கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சி’ (Mixed Gas Diving Training) திட்டத்தை

17405459651

“பிள்ளை அப்பாவுக்கு 5 கோடி கொடுக்கக்கூடாதா?” – மகன் விஜய் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு