இலங்கை அரச பொறிமுறை இந்தளவுக்கு கீழ்த்தரமான நிலைக்கு வீழ்ச்சியடையத் தேவையில்லை – நாமல்

அரசாங்கத்துக்கும் பொலிஸாருக்கும் தேவையான முறையில் வாக்குமூலங்களை வழங்குமாறு கோரி, விசாரணை நிறுவனங்களால் சாட்சியாளர்களுக்கு விடுக்கப்படும் கடுமையான அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டின் அரச பொறிமுறை இந்தளவுக்கு கீழ்த்தரமான நிலைக்கு வீழ்ச்சியடையத் தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

றாகமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று அரசாங்கம் மற்றும் பொலிஸின் தேவைக்கேற்ப, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அல்லது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் செல்பவர்கள் அவர்கள் சொற்படி கேட்காவிட்டால், அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

அவர்களைக் கொல்லாமல் கொல்கிறார்கள். பொலிஸாருக்குத் தேவையான வாக்குமூலத்தை எழுதி வாங்கும் வரை அவர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

கடந்த காலத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைத்து, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவின் பெயர்களைக் குறிப்பிடுமாறு கடுமையாக வற்புறுத்தியுள்ளனர்.

அவ்வாறு செய்யாவிட்டால், முன்னதாக கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கில் வாக்குமூலம் அளிக்க வந்தவருக்கு நேர்ந்த கதியைப் போன்ற நிலை ஏற்படும் என்றும், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மரண பயத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான சத்தியக்கடதாசி மூலமான வாக்குமூலத்தை கபில சந்திரசேன நீதிமன்றத்திலும் சமர்ப்பித்திருந்தார். ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை, இந்த அழுத்தங்கள் காரணமாக இன்று அவரது உயிர் பறிபோயுள்ளது.

இதற்கு யார் பொறுப்புக்கூறுவது? யாராவது தவறு செய்திருந்தால் அதற்கு எதிராக நியாயமான முறையில் விசாரணைகளை நடத்துங்கள். எங்களை எப்போது அழைத்தாலும் நாங்கள் வந்து வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருக்கிறோம், நாங்கள் எங்கும் ஓடி ஒழியவில்லை.

எனவே இவ்வாறு தேவையில்லாமல் அழுத்தங்களைப் பிரயோகித்து அச்சுறுத்தி, இவர்களது பெயரைக் குறிப்பிடுமாறு வற்புறுத்துவதும், அவ்வாறு செய்யாவிட்டால் உங்களது மனைவியையும் பிள்ளைகளையும் சிறையில் அடைப்போம் என்று மிரட்டுவதும் ஏன்? எமக்குத் தேவையான வாக்குமூலத்தை நீங்கள் தராவிட்டால் உங்களுக்கு மரணம் தான் நேரிடும் என்று அச்சுறுத்துவதும், ஒருவரை உயிருடன் கொல்லாமல் கொல்வதும் எதற்காக? நாட்டின் அரச பொறிமுறை இந்தளவுக்கு கீழ்த்தரமான நிலைக்கு வீழ்ச்சியடையத் தேவையில்லை என்றார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது