இலங்கையில் நீரில் மூழ்கி எற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க தேசிய செயல்முறை

நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வலுவான தேசிய செயல்முறையை உருவாக்கும் நோக்கில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்று அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

நீர் தொடர்புடைய உயிரிழப்புகளை குறைத்து, நாடு முழுவதும் பொது பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த பல்துறை கட்டமைப்பை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

நீண்டகாலமாக அவசியமாக இருந்த ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு செயல்முறையை உருவாக்கும் முதல் கட்டமாக இக்கூட்டம் அமைந்தது. பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த இந்த முக்கிய முயற்சி நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் Dr. மதுர செனவிரத்ன மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் திரு தினிந்து சமன் ஹென்னாயக்க ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களின்தற்போதைய தீவிரத்தன்மையை விளக்கினார். இத்தகைய உயிரிழப்புகள் சமூகப் பிரச்சினை மட்டுமல்லாது, பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய விடயமாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், முறையான பாதுகாப்பு செயல்முறை இல்லாதது தேசிய நலன்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் சர்வதேச மதிப்பை பேணுவதற்கும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர், நீர்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை தேசிய பாடத்திட்டத்தில் இணைக்கும் யோசனையை முன்வைத்தார். இதன் மூலம் மாணவர்களிடையே வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு உணர்வை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இளைஞர் விவகார பிரதி அமைச்சர், இளைஞர்களின் திறனையும் பங்களிப்பையும் வலியுறுத்தினார். சிறப்பு பயிற்சி திட்டங்கள் மூலம் இளைஞர்களை இயக்கி, திறமையான தன்னார்வப் படையினரை உருவாக்குவதன் மூலம் தொழில்முறை உயிர்காக்கும் சேவைகளுக்கு ஆதரவான நிலையான சமூக அடிப்படையிலான பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலில் பல்வேறு உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டு, முன்மொழியப்பட்ட தேசிய செயல்முறையில் தங்களது பொறுப்புகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.

dailythanthi_2026-05-13_fg2tx4ye_0

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

May 14, 2026

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (DA) 60 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ச. ஜோசப்

rain-rules

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை

768-512-26672389-thumbnail-16x9-shan

“அதிமுக அலுவலகம் எங்களின் கோவில்; தூசி கூட பட விடமாட்டோம்!” – சி.வி.சண்முகம் பேட்டி!

May 14, 2026

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், “நாங்கள் உண்மையான தொண்டர்கள் என்பதைச் சட்டப்படி நிரூபித்த

687648807_1285529470437523_5068884044641172277_n4

“ரூ.2,500 தருவதாகக் கூறிவிட்டு ரூ.1,000-ஐயும் இழுத்தடிப்பதா?” – முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, முதலமைச்சர் விஜய்யை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாக

1fb8d4e582643c30a07cba7b79d80a531778748271620113_original

“EPS உட்பட 22 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்க!” – சபாநாயகரிடம் சி.விஜயபாஸ்கர் தரப்பு அதிரடி மனு!

May 14, 2026

சென்னை: அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக்

ff4c6bd1bec4c8927e87c50e0deb633b_original

திருச்சி கிழக்கு தொகுதி காலி! 6 மாதங்களில் இடைத்தேர்தல்; ஸ்டாலின் போட்டியா? – அரசியல் களத்தில் பரபரப்பு!

May 14, 2026

சென்னை: தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து,

dmk-stalin

“தோல்விக்கு நானே பொறுப்பு; ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லாதீங்க!” – திமுக மா.செக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்!

May 14, 2026

சென்னை: “தேர்தல் தோல்விக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன்” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

image1-2026-05-14t131334-184-1778744675

“முன்கூட்டியே ஆர்டர் செய்த சோபா அது!” – விசிக அலுவலக சர்ச்சை குறித்து திருமாவளவன் விளக்கம்!

May 14, 2026

சென்னை: தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் முடிவை விசிக அறிவிக்கத் தாமதமான நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் புதிய சோபாக்கள் வந்திறங்கியது

nana

நானாட்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல், இன்று (14) மன்னார், நானாட்டான் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக்

put

சீரற்ற காலநிலை; புத்தளம் ரயில் சேவை பாதிப்பு

May 14, 2026

சீரற்ற காலநிலை காரணமாக நிலவும் வெள்ளப்பெருக்கினால், புத்தளம் ரயில் பாதையிலான ரயில் சேவைகள் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக

dd

திட்டமிடல் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் திட்டமிடல் மற்றும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்று(14.05.2026)

poi

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவகத்திற்கு கள வியஜம் மேற்கொண்ட எம்.பி

May 14, 2026

ழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 8 மாதங்களாக திறக்கப்படாமலிருந்த உணவகம் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம்(13) நாடாளுமன்ற