இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இன்று (மே 15) காலை 6:00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த அறிக்கையின் முக்கிய தகவல்கள் வருமாறு:
-
பாதிக்கப்பட்ட பகுதிகள்: எட்டு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: இதுவரை 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
பாதுகாப்பு மையங்கள்: தற்போது 104 பேர் இரண்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
சொத்து சேதங்கள்: சுமார் 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.