இலங்கைத் தமிழர்களுக்கான பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நிலையான சமாதானம் – பிரிட்டனில் கலந்துரையாடல்

தமிழர்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் வென்றெடுக்க உழைப்போம் – தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு உறுதி

தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக்குழுவின் டேம் சியோபைன் மெக்டொனாக் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பதுடன் தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைந்துகொள்வதிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் தாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டினை அக்குழுவின் உறுப்பினர்கள் மீளுறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுவின் இந்த ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டம் அண்மையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள், பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்பான பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

அதன்படி இக்கூட்டத்தில் தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவராக டேம் சியோபைன் மெக்டொனாக் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.

அதேபோன்று பிரதித் தலைவர்களாக உமா குமாரன், பொபி டீன், லூயி பிரென்ஞ் ஆகியோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

அதேவேளை இவ்வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது இலங்கைத் தமிழர்களுக்கான பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நிலையான சமாதானம் என்பன உள்ளடங்கலாக கரிசனைக்குரிய முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மரபணு பரிசோதனைக்கான (டி.என்.ஏ) தரவு வங்கி உருவாக்கல் திட்டம், சர்வதேச நீதிமன்றம் அல்லது ஏனைய சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறைகளை நாடுவதற்கான வழிமுறைகள், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கததின் அரசியல் போக்குகள் மற்றும் இன்னமும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை மேலும் வலுப்படுத்தல், இந்தியாவில் இடம்பெற்றுவரும் தெளிவூட்டல் முயற்சிகள், வடக்கு – கிழக்கு மக்களுக்கான இழப்பீடு, மீள்குடியேற்றம், மீளக்கட்டியெழுப்பல் என்பவற்றை இலக்காகக்கொண்ட நடவடிக்கைகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைந்துகொள்வதிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும், நிலையான அமைதி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதிலும் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டினை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக்குழுவின் உறுப்பினர்கள் மீளுறுதிப்படுத்தினர்.

6

வைகோவுடன் மோதல்- திமுகவில் இணையும் 2 மதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

June 27, 2026

‘சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கொள்கை மோதல்கள் முற்றிப்போய், இன்று இரு எம்.எல்.ஏ.க்கள் திமுகவில்

canada policee aaa

டார்ட்மவுத் (Dartmouth) பகுதியில் துப்பாக்கிச் சூடு: 39 வயது நபர் பலி

June 27, 2026

டார்ட்மவுத் பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹாலிஃபாக்ஸ் பிராந்திய காவல்துறையினர்

GMJMLNA2EXY7FESC4EYUSQW72Q

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் விபத்து: ஒருவர் காயம், தப்பியோடிய இரு சந்தேகநபர்களைத் தேடும் காவல்துறை

June 27, 2026

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown) சனிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளான

MGI7KLC6XNFF7BPVXHBN5K6LFM

பிராம்ப்டனில் மோதிவிட்டு தப்பிய வாகனம்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

June 27, 2026

கனடா, பிராம்ப்டன் (Brampton) நகரில் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற ‘மோதிவிட்டு தப்பியோடிய’ (Hit-and-run) வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள்

729375397_1246220910798013_4024349540228563499_n

கொலைக் குற்றச்சாட்டில் தேடப்படும் நபர் டொராண்டோவின் ‘ஹை பார்க்’ (High Park) அருகேகாணப்பட்டுள்ளார்

June 27, 2026

இரட்டைக் கொலைச் சம்பவம் (Double homicide) தொடர்பாக கனடா தழுவிய பிடியாணை (Canada-wide warrant) பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் ஜோர்டான்

4

உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா? – அன்புமணி ராமதாஸ்

June 27, 2026

‘சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முடிவுகள்

3

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக: பொதுக்குழுவில் நிறைவேறியது தீர்மானம்

June 27, 2026

‘சென்னை: சுமார் 9 ஆண்டுகளாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்

2

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

June 27, 2026

‘சென்னை: டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் நாராயணாவை தவெக அரசு நியமித்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

photo-collage.png

5000 கலைஞர்களின் பரதநாட்டிய கின்னஸ் சாதனை முற்சியில் பண மோசடி; அமைச்சர் மீது முறைப்பாடு!

June 27, 2026

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியின் பின்னணியில், திட்டமிட்ட பாரிய பண

muk

மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

June 27, 2026

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில், கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய

suresh11

சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் அனுமதி

June 27, 2026

அரச உளவுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய

deng

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 தைக் கடந்தது

June 27, 2026

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தேசிய