டார்ட்மவுத் பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹாலிஃபாக்ஸ் பிராந்திய காவல்துறையினர் (Halifax Regional Police) கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் லஹே வீதிக்கு (Lahey Road) அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்த போது, அங்கு 39 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலைக் குற்றமாக (Homicide) கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இது தற்செயலாக அல்லது அறிமுகமில்லாத நபர் மீது நடத்தப்பட்ட ஒரு சீரற்ற தாக்குதல் (Random incident) அல்ல என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
இக்கொலைச்ம்பவம் குறித்த விசாரணையை முக்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவு (Major Crime Unit) முன்னெடுத்து வருகின்றது.