உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி பால்மாவின் விலைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் இன்று (20) உறுதிப்படுத்தியுள்ளனர்.
புதிய விலை திருத்தத்தின்படி, 450 கிராம் எடையைக் கொண்ட இறக்குமதி பால்மா பாக்கெட் ஒன்றின் விலை 50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 1 கிலோகிராம் எடையைக் கொண்ட பால்மா பாக்கெட் ஒன்றின் விலை 125 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.