இரண்டு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட நபரால் பரபரப்பு

தமது இரண்டு குழந்தைகளுடன் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து நபர் ஒருவர் வாவியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட சம்பவத்தால் அங்கு பாரிய பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று (23) இரவு குறித்த பாலத்திற்கு வந்த நபர், அங்கிருந்து வாவியில் குதிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் அதனை அவதானித்த நிலையில், உடன் விரைந்து சென்று குறித்த நபரின் கைகளிலிருந்த 2 பிள்ளைகளையும் பறித்துப் காப்பாற்றியுள்ளார்

எவ்வாறாயினும், குறித்த நபர் பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்த நிலையில், அங்கு மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்கள் இணைந்து அவரைப் பாதுகாப்பாக மீட்டு கரை சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த இரு பிள்ளைகளையும் பொறுப்பேற்றதுடன், குறித்த நபரையும் பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.

நொச்சிமுனையைச் சேர்ந்த குறித்த நபரின் மனைவி தொழில்வாய்ப்புக்காக ஓமான் சென்றுள்ள நிலையில், போலி முகவர் நிலையத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் அவருக்கு ஓமானில் இதுவரை தொழில் கிடைக்காத நிலையில், அங்குள்ள அறையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மனைவியை மீட்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்த விரக்தியில் தாம் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு இரகசியமான, இலவச ஆலோசனை வழங்கும் 24 மணி நேர உதவி எண்கள்:

தேசிய உளநல உதவி எண் 1926 (அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி), CCCline நெருக்கடி ஆதரவு சேவை 1333, லங்கா லைஃப் லைன் 1375 (வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு WhatsApp/Telegram: +94 707 112 112), மற்றும் ஸ்ரீலங்கா சுமித்ரயோ 0707 308 308 அல்லது 011 269 2909 (WhatsApp: 0767 520 620). உடனடி உயிர் ஆபத்து அல்லது அவசர மருத்துவத் தேவைகளுக்கு சுவசெரிய 1990 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

the

மாவீரர் துயிலும் இல்ல பசுமைத் திட்டத்திற்கு லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் உதவி

November 25, 2026

மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் என்றும் நினைவில் நிறுத்தி, அவர்களின் நினைவிடங்களைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர்

7

“கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குகிறதா? – அமைச்சர் அருண்ராஜ் பதில்”

November 25, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு

6

“தவெக எம்.எல்.ஏ. மீது பாலியல் தொல்லை புகார் அளித்த கலெக்டரிடம் விசாரணை”

November 25, 2026

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு அம்மாவட்ட தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்திகளை

5

“முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்குவதுடன் ஏற்றுமதி வரை ஆதரவு – அமைச்சர் கீர்த்தனா உறுதி”

November 25, 2026

சென்னை: சென்னை கோவளத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, முதலீட்டாளர்களுக்கு தொழிற்சாலை

3

“தவெக ஆட்சியை கவிழ்க்க சில ஐஏஎஸ் அதிகாரிகள் சதி – வைகோ பரபரப்பு பேச்சு”

November 25, 2026

சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற \”வைகோ இன் பார்லிமெண்ட்\” நூல் மறுவெளியீட்டு விழாவில் உரையாற்றிய

2

“திமுக நிர்வாகிகள் மீதான புகார் என்றால் காவல்துறை விரைந்து செயல்படுகிறது – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு”

November 25, 2026

சென்னை: பல்வேறு பிரச்சினைகளில் நடவடிக்கை கோரி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஐஜி அவினாஷ்

WJYLHQPJA5BFTNQ3J6KQ4PJF44

காசா லோமா அருகே வீடு புகுந்து தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

November 25, 2026

டொரொன்டோ, நவ. 25: கனடாவின் டொரொன்டோ நகரில் உள்ள காசா லோமா (Casa Loma) பகுதியில் புதன்கிழமை (25) அதிகாலை

canada airport2

குற்றப் பின்னணி கொண்ட சுமார் 7,000 கனேடிய விமான நிலைய ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அனுமதி

November 25, 2026

டொரொன்டோ, நவ. 25: கனடாவின் விமான நிலையங்களில் பின்னணிப் பணிகளில் ஈடுபடுவதற்காக, குற்றப் பின்னணி கொண்ட சுமார் 7,000 ஊழியர்களுக்குப்

WZ3QMADJBNBSJKXVBHNKXGCUYE

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் கனடாவின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்: ட்ரம்ப் பிரதிநிதி ஜேமிசன் கிரியர்

November 25, 2026

அலுமினியம் மற்றும் வாகனத் துறைகளில் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், டிசம்பர் ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னர் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்

mv

நெல்லியடியில் மாவீரர் நினைவாலயம் அங்குரார்ப்பணம்!

November 25, 2026

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் நெல்லியடியில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம் இன்று (25) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

trupm

அமெரிக்கா தனது மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான சில நாடுகள் மீது புதிய வரி விதிப்பு!

November 25, 2026

அமெரிக்கா தனது மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான சில நாடுகள் மீது புதிய இறக்குமதி தீர்வை வரிகளை அறிவித்துள்ளது. உற்பத்தித் துறைகளில்

gl

வாழ்க்கைச் சுமை அழுத்துவதால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்கள்…

November 25, 2026

இலங்கையில் வாழ்க்கைச் சுமையை எதிர்கொள்ள முடியாமல், மக்கள் தங்களுடைய தங்க நகைகளை அடகு வைத்து பின்னர் அதனை மீட்க முடியாமல்