யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, நெடுந்தீவுக்கான படகுச் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
கடந்த சனிக்கிழமை ‘நெடுந்தாரகை’ படகினை வட பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகே நேரில் சென்று பார்வையிட்டு, அதனைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் மூலம் இந்தப் படகு இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் தனது சேவையில் ஈடுபடவுள்ளது.
‘நெடுந்தாரகை’ படகினை நிரந்தரமாகத் திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினூடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.