இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால் பலமான அரச சேவை இல்லாமையே – ஜனாதிபதி

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளின் தனித்துவமான சேவையைப் பாராட்டும் வகையிலான “விசிஷ்ட சேவா விபூஷண” (Vishishta Seva Vibhushana) பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

குறைந்தது 25 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவைக்காலமும், நன்மதிப்பும் கொண்ட முப்படைகளில் சேவையாற்றும் மற்றும் ஓய்வுபெற்ற 57 சிரேஷ்ட அதிகாரிகள் ஜனாதிபதியிடமிருந்து இந்தப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்றைய தினம் கௌரவிக்கப்பட்ட முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், இரவென்றும் பகலென்றும் பாராது, காலநிலை மாற்றங்களைப் பொருட்படுத்தாது, உயிராபத்தைப் பற்றிக் கவலைப்படாது நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்கள் எனக் குறிப்பிட்டார்.

சிக்கலான யுத்த காலங்களிலும் இயற்கைப் பேரிடர்களின்போதும் சாதாரண அரச ஊழியரை விட அதிக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இந்த அதிகாரிகளின் வெற்றிக்குப் பின்னால் இருந்து பலமாக இருந்த அவர்களின் மனைவிகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் தமது விசேட நன்றிகளைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி கூறினார்.

ஒரு அரசாங்கமாக இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால் பலமான அரச சேவை இல்லாமையும், அது குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையுமே ஆகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்ல சவால்களை வெற்றிபெறக்கூடிய பலமான அரச சேவை அத்தியாவசியமானது என்றும் வலியுறுத்தினார்.

பல நாடுகள் அபிவிருத்தியடைந்துள்ளமை சட்ட திட்டங்களினால் மட்டுமல்ல, சுய ஒழுக்கத்தினாலுமே ஆகும் எனக் குறிப்பிட்ட அவர், இந்த விருது வெறும் தனிப்பட்ட கௌரவம் மட்டுமல்லாது, சமூகப் பொறுப்பாகக் கருதி பிள்ளைகளுக்கும் அரச சேவைக்கும் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்புப் பிரதிமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுநிலை) சம்பத் துய்யகொந்தா மற்றும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

fss

24 மணி நேரமும் போதைப்பொருள் பற்றி அறிவிப்பதற்கான ‘1818’ அவசர சேவை!

October 1, 2026

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்திட்டத்திற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்ட 1818

ra

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் – ஐ.தே.க அறிக்கை!

October 1, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது, தனியார் ஊடக நிறுவனம் ஒன்றின் ஒளிப்பதிவாளர்

chil

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்!

October 1, 2026

இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தை பொருத்தமட்டில் இரு தரப்பினரும் பல்வேறு துஷ்பிரயோகங்களை உடலாலும்

WhatsApp Image 2026-10-01 at 8.02.50 AM

மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்

October 1, 2026

சமூக வலைத்தளங்களில் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் விமர்சிப்பவர்கள், அத்தகைய செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பெருந்தோட்ட மற்றும் சமூக

WhatsApp Image 2026-10-01 at 8.02.40 AM

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்!

October 1, 2026

செப்டம்பர் மாதத்தின் முதல் 27 நாட்களில் நாட்டுக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 143,623 ஆக உயர்ந்துள்ளதாக

WhatsApp Image 2026-10-01 at 8.00.03 AM

இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற முகாம் ஆட்சியர்!

October 1, 2026

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் மீது அதிகாரி ஒருவரால் காலணி வீசப்பட்டதாக

WhatsApp Image 2026-10-01 at 7.55.42 AM

சிங்கப்பூரில் இருந்து ஷிரந்தி வராவிட்டால் காத்திருக்கும் ஆபத்து!

October 1, 2026

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக அறிவித்துள்ள ஷிரந்தி ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவில்லையெனில் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என

WhatsApp Image 2026-10-01 at 7.55.35 AM

நாட்டை விட்டு வெளியேறும் பல அரச அதிகாரிகள்..

October 1, 2026

அதிகரித்து வரும் வரிச்சுமையால் நாட்டின் திறமையான பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களுக்கு மேலதிக

WhatsApp Image 2026-10-01 at 7.52.38 AM

அவசர கடன் பெறுபவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

October 1, 2026

இணையவழியில் உடனடி கடன் பெற விரும்பினால், சம்பந்தப்பட்ட நிறுவனம் விதித்துள்ள நிபந்தனைகளை சரியாகப் புரிந்துகொண்டு கடன் வசதிகளைப் பெறுமாறு பொலிஸ்

WhatsApp Image 2026-10-01 at 7.49.39 AM

60 நாட்களுக்குள் பதில் வேண்டும்.. ஐநாவிடமிருந்து அரசிற்கு அழுத்தம்

October 1, 2026

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை

an

இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால் பலமான அரச சேவை இல்லாமையே – ஜனாதிபதி

October 1, 2026

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளின் தனித்துவமான சேவையைப் பாராட்டும் வகையிலான “விசிஷ்ட சேவா

d

பிள்ளையார் கோவில் பகுதியில் பௌத்த வழிபாடுகளுக்கு அழைப்பு; வவுனியாவில் சம்பவம்!

October 1, 2026

வுனியா சமளங்குளம் பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு