ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் கைது

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் கோவில் முன்றலில் கடந்த மாதம் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுனரின் வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக தலைமறை வாகியிருந்து வந்த 26 வயதுடைய அலியாஸ் மாச்சி என்றழைக்கப்படும் மதுஷன் மற்றும் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உட்பட இருவரை புதன்கிழமை (08) இரவு வாள்களுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

அது பற்றி தெரியவருவதாவது;

ஆரையம்பதி; செல்வநகர் பகுதியைச் சேர்ந்த விஜயரியன் தலைமையில்; மட்டக்களப்பு ரவுடி குழு என்ற பெயரில் இயங்கிவரும் வாள்வெட்டுக்குழு கடந்த மாதம் 29 ம் திகதி வம்மிக்கேணி மாரியம்மன் ஆலய முன்றலில் ரவுடிக்குழு ஒன்றின் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதல் நடாத்திய மட்டக்களப்பு ரவுடி வாள்வெட்டுக் குழுவினர் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

இந்த நிலை தலைமறைவாகி வந்த வாள்வெட்டுக் குழுவை பொலிசார் தேடிவந்துள்ள நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை யடுத்து சம்பவ தினமான புதன்கிழமை (8) இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராஜா றஜீவ்காந்தன் தலைமையிலான குழுவினர் வாள்வெட்டுக் குழுவினர் தலைமறைவாகியிருந்த வீட்டை சுற்றிவளைத்து இருவரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் 3 வாள்களை மீட்டனர்

இதில் கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த 26 வயதுடைய அலியாஸ் மாச்சி என்றழைக்கப்படும் செல்வநகரைச் சேர்ந்த மதுஷன், மற்றும் செல்வநகரைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் எனவும் இந்த வாள்வெட்டு குழுவினர் இந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வாளுகளுடன் வலம் வந்து பொது மக்களை அச்சுறுத்தி வந்துள்ளதுடன் போதை பொருள் கடத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பலர் மீது வாள்வெட்டு தாக்குதல்கள் மேற் கொண்டு வந்துள்ளனர் எனவும் கடந்த 2025ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் ஆரையம்பதி மகாவித்தியாலய மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி ஓடியுள்ளதாகவும் இந்து குழுவில் அந்த பகுதியைச் சோந்த 15 தொடக்கம் 28 வயது வரையிலான 10 க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு செயற்பட்டுவருவதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த