விஜயவாடா:
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக விஜய் ஆந்திர மாநிலம் சென்றுள்ளார்.
சிறப்பான வரவேற்பு:
தனி விமானம் மூலம் பிற்பகல் 3.45 மணிக்கு விஜயவாடா சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு, ஆந்திர அரசு சார்பில் அம்மாநில அமைச்சர்கள் நேரில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கனகதுர்கை அம்மன் கோவிலில் வழிபாடு:
விஜயவாடா விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கனகதுர்கை அம்மன் கோவிலுக்கு சென்ற அவருக்குச் செண்டை மேளம் முழங்கப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சாமி தரிசனம் செய்தார். முதலமைச்சர் விஜய்யின் வருகையாலும், தசரா திருவிழாவாலும் ஏராளமான மக்கள் திரண்டதால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
#CMVijay #KanakaDurgaTemple #Vijayawada #TVK #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive