“ஆட்சியைக் கலைத்தால் அடுத்த நாளே தமிழ்நாட்டில் பெண்கள் புரட்சி வெடிக்கும்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுன் எச்சரிக்கை!

சென்னை:

தவெக ஆட்சியைக் கலைத்தால் அடுத்த நாளே தமிழ்நாட்டில் மாபெரும் பெண்கள் புரட்சி வெடிக்கும் எனப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுன் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகளிர் திட்டம்:

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று 1,276 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 117 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி நிதி இணைப்பு வழங்கும் மாபெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுன், “தற்போதைய கட்டமைப்புகள் அனைத்தும் ஆண்களை மையப்படுத்தியே இருக்கின்றன. சமையல் என்பது ஆண், பெண் இருவருக்குமான பொதுவாக இருக்க வேண்டும். பெண்களின் உடலைப் பார்த்து விமர்சனம் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மதுவை முற்றிலுமாக ஒழிப்பதே அரசின் மாபெரும் நோக்கம்,” என்று அவர் கூறினார்.

பெண்கள் புரட்சி:

தொடர்ந்து அவர், “அமைச்சர்களாக இருக்கும் எங்களுக்கு மதுபான ஆலைகள் இல்லை. மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காகத் தாங்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இடைத்தேர்தலில் பணம் கொடுக்காமல் இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியைக் கலைத்துப் பாருங்கள், அடுத்த நாளே தமிழ்நாட்டில் மாபெரும் பெண்கள் புரட்சி வெடிக்கும். பெண்கள் சாலைக்கு வந்து நிற்பார்கள். இது விஜய்யின் ஆட்சி அல்ல, பெண்களின் ஆட்சி. ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என்ற பயம் எங்களுக்குச் சிறிதும் இல்லை,” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

ஊழல் விசாரணை:

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “பெரியார் நூலகத்தில் சம்பந்தமே இல்லாத புத்தகங்கள், சரியான விதிமுறைகளைப் பின்பற்றாமல் அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டி இருந்தார். உடனே இது குறித்துத் துரிதமாக விசாரிக்கப்பட்டதில் கடந்த திமுக ஆட்சியில் இந்த மாபெரும் ஊழல் நடந்திருப்பது அப்பட்டமாகத் தெரிய வந்திருக்கிறது. இந்த ஊழல் குறித்து முறைப்படி முழுமையான விசாரணை நடத்த உத்தரவிடப் போகிறோம். பெரியார் பெயரில் இப்படி ஒரு ஊழல் செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் நிறைய நூலகங்களைக் கட்டினது நாங்கள் தான் என்பது போன்று தமிழ்நாட்டில் நிறைய ஊழல் செய்ததும் நாங்கள் தான் என்பதையே திமுக நிரூபித்துள்ளது,” என்று அவர் கடுமையாகச் சாடினார்.

#AadhavArjuna #TVK #WomensRevolution #CMVijay #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive

7

“அவர்களே பாம் வைப்பார்களாம், அவர்களே எடுப்பார்களாம்!” – அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்!

November 8, 2026

“‘சென்னை: பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில், திமுக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருப்பதை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாகக்

6

“பெரியார் புத்தக கொள்முதல் முறைகேடு: விசாரணைக்கு நாங்கள் தயார்!” – உதயநிதி ஸ்டாலின்!

November 8, 2026

சென்னை: முரசு புயலின்போது உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

5

“அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்!” – ஜே.சி.டி.பிரபாகர் அதிரடி!

November 8, 2026

சென்னை: அதிமுகவில் இருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 பேருக்குத் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாகச் சபாநாயகர்

4

“மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது!” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

November 8, 2026

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என முதலமைச்சர் விஜய் பிரதமர்

3

“’சண்டியர்’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்!” – கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

November 8, 2026

கோவை: கமல்ஹாசன் தனது புதிய திரைப்படத்திற்கு மீண்டும் ‘சண்டியர்’ எனப் பெயர் சூட்டியுள்ளதற்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்

2

“உலகிலேயே AI தொழில்நுட்பத்தில் ஊழல் செய்து சாதனை படைத்த திமுக!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

November 8, 2026

சென்னை: உலகிலேயே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முதலில் ஊழல் செய்து திமுக மாபெரும் உலக சாதனை படைத்துள்ளதாகப் பொதுப்பணி

1

“சீமானை பொது வேட்பாளராக அறிவித்தால்…!” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

November 8, 2026

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், அனைத்துக் கட்சிகளும் சீமானைப் பொது வேட்பாளராக அறிவித்தால் பாஜக

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

nas

சூர்​யாவின் திரைப்​படத்தை எப்​படி நிராகரிக்க முடியும்? – நஸ்ரியா

November 8, 2026

சூர்யா நடித்​துள்ள ‘சீன்’ திரைப்​படம் வெளியானது. இதில் நஸ்ரியா, நஸ்​லென் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். இதன் புரமோஷனில், ‘3 அல்​லது

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

poc

பொங்கலுக்கு வருகிறது ‘பாக்கெட் நாவல்’

November 8, 2026

தியாகராஜன் குமாரராஜன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘பாக்கெட் நாவல்’ படம் 2027 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

tam

‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு தொடக்கம்

November 8, 2026

சி.எஸ்.அமுதல் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவின் நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு இன்று (நவ.5) தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.