அ.தி.மு.கவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை பறித்து, அவர்களுக்கு பதிலாக 17 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அ.தி.மு.க, பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் விஜய் கொண்டு வந்த, த.வெ.க ஆட்சி மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரித்து சி.வி.சண்முகம் தரப்பு அ.தி..எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். எதிர்த்து பழனிசாமி தரப்பு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
பழனிசாமியை எதிர்த்து செயல்பட்ட நிலையில், சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மொத்தம் 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, பல்வேறு தொகுதிகளை சேர்த்து, 17 மாவட்டங்களாக குறைத்து, அவற்றுக்கான புதிய மாவட்ட செயலாளர்களையும் பழனிசாமி நியமித்து உத்தரவிட்டுள்ளார்.