அராலியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – அராலி தெற்கு பகுதியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, களுவத்துறை பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் பணிப்பெண் ஒருவரின் ஊடாக பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றையதினம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் பல தடவைகள் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்டபோதும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது அயலவர்கள் அங்கு சென்று பார்த்த போது தீயில் கருகிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

சடலத்துக்கு அருகில் இரண்டு மண்ணெண்ணெய் கொள்கலன்கள் காணப்பட்டன. அவற்றில் ஒன்று முழுமையாக தீர்ந்திருந்தது.

வீட்டின் உள்ளே உள்ள மின்விசிறியில் கயிறு ஒன்று கட்டப்பட்டு, அறுக்கப்பட்டும் காணப்பட்டுள்ளது.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

686884431_122290124114194641_2518230082458624937_n (1)

வின்ட்சர் வன்முறைத் தாக்குதல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல்: சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்

May 1, 2026

வின்ட்சர் (Windsor) பகுதியில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் நபர்

686884431_122290124114194641_2518230082458624937_n

வின்ட்சர் வன்முறைத் தாக்குதல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல்: சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்

May 1, 2026

வின்ட்சர் (Windsor) பகுதியில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் நபர்

ira

இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் தீ

May 1, 2026

களுத்துறையிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (30) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியில்

CANADA BORDER IMM

கனடா குடியேற்ற மோசடி வழக்கு; ரெஜினா நகரைச் சேர்ந்தவருக்கு தண்டனை

May 1, 2026

கனடா எல்லை சேவைகள் முகமையின் (CBSA) பல வருட கால புலனாய்வைத் தொடர்ந்து, ரெஜினா (Regina) நகரைச் சேர்ந்த ஒருவர்

683077448_122290158674194641_2937578490981462652_n

போலிப் பணத்தைப் பயன்படுத்தி மோசடி: சந்தேக நபர் தேடப்படுகிறார்

May 1, 2026

போமன்வில் (Bowmanville) மற்றும் கோபர்க் (Cobourg) ஆகிய பகுதிகளில் போலிப் பணத்தைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்

Chithra

சித்ரா பௌர்ணமியின் ஆன்மீக முக்கியத்துவம்

May 1, 2026

2026-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மே 01 (சித்திரை 18) வெள்ளிக்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், தமிழ் மாதமான

hurm

ஈரான் அமெரிக்காவுக்கு விடுத்த எச்சரிக்கையால் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் சிக்கல் – ரொயிட்டர்ஸ்

May 1, 2026

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், அமெரிக்க நிலைகள் மீது நீண்ட மற்றும் வலிமிகுந்த தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என

sl

பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை

May 1, 2026

பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று

Manj

கடத்தி வரப்பட்ட 994 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

May 1, 2026

புத்தளம், பாலாவி பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 994 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக

Poli

மே தின பாதுகாப்பு குறித்து…

May 1, 2026

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளினால் கொழும்பு நகரம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மே

dea

அராலியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் சடலமாக மீட்பு

May 1, 2026

யாழ்ப்பாணம் – அராலி தெற்கு பகுதியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி தெற்கு,

rice

அரிசியை அதிக விலைக்கு விறற்றவருக்கு அபராதம்

May 1, 2026

கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, அக்கரைப்பற்று பகுதியில்