Ward 25 – Scarborough—Rouge Park – Toronto மாநகராட்சித் தேர்தலில், நீதன் ஷான் 15,727 வாக்குகள் வாக்குகள் பெற்று மீண்டும் நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நீதன் ஷான் இன உறவுகள் தொடர்பான நகர்ப்புறக் கூட்டமைப்பான Urban Alliance on Race Relations (UARR) அமைப்பின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார். கல்வித் துறையிலும் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ள அவர், Scarboroughவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Toronto District School Board (TDSB) அறங்காவலராகவும், TDSB தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2006 முதல் 2010 வரை York Region District School Board அமைப்பின் அறங்காவலராகவும் அவர் சேவையாற்றினார்.
இனநீதிக்காக நீதன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் நீதி ஆகிய துறைகளில் அமைப்புசார் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்துவதில் அவர் கவனம் செலுத்துகிறார். மனித உரிமைகளுக்காக மேற்கொண்ட பணிக்காக நீதன் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில் UARR வழங்கிய Race Relations Award மற்றும் Toronto Community Foundation வழங்கிய Vital People Award ஆகியவை அடங்கும். Toronto நகரசபை உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில், நகரின் Youth Equity Champion மற்றும் Newcomer Advocate ஆகிய அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.