அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் DASH நிறுவனத்தின் செயற்பாடுகளை பார்வையிடும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல்-இராணுவ விவகாரங்கள் பணியகத்தின் ஆயுத அகற்றல் மற்றும் குறைத்தல் அலுவலகத்தின் திட்ட முகாமையாளரான Keith D. Clark இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது பச்சிலைப்பள்ளி பிரதேசசெயர்பிரிவில் அரசர்கேணி பகுதியில் அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் DASH மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் முன்னெடுத்து வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு அதன் முன்னேற்றம் தொடர்பாக அதிகாரிகளிடமிருந்து விளக்கங்களைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து Pallai Central College மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெடிபொருள் அபாயம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கிலும் அவர் கலந்துகொண்டார்.
நிகழ்வின் போது மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், பாடசாலையின் பயன்பாட்டிற்காக 30 கதிரைகளையும் அன்பளிப்பாக வழங்கினார்.
இந்நிகழ்வில் DASH நிறுவனத்தின் பிரதிநிதிகள், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்