இலங்கைக்கான் ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதியை மார்க் அன்ட்ரே பிரான்சினை
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவில் சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார் சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராஜாவின் சகோதரர் ஆகியோர் சந்தித்து அனோஜனின் நிலைமை குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் ரஜீவ்காந் தெரிவித்துள்ளதாவது
அனோஜனுக்கு சவுதி அரேபியாவிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதற்கான வசதியை வழங்கியுள்ளனர்.
தனது தலையில் ஆறு காயங்கள் இருப்பதாக அவரே அழைத்து எங்களிடம் தெரிவித்தார்.
அனோஜன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டார்இஅதன் பின்னர் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அனோஜன் எங்களுக்கு தெரிவித்த விடயங்கள் அனைத்தையும் ஐநாவின் வதிவிடப்பிரதிநிதியிடம் தெரிவித்தோம்
அனோஜனின் விடுதலை என்பது ஒரு உலகளாவிய பிரச்சாரம் அதனை அனைத்து வழிகளிலும் நாங்கள் முன்னெடுப்போம் என ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்