அனைத்து அரச நிறுவனங்களும் போதைப் பொருள் ஒழிப்பு தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும்

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை, மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக செயற்படுத்தப்படும் தேசிய திட்டத்திற்கு அமைய, நிறுவன மட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டங்கள், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அந்தந்த நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளோரில் சுமார் 70 வீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது இங்கு வெளிப்படுத்தப்பட்டதுடன், கடும் பிரச்சனையாக மாறியுள்ள சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதில் அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கிடையில் போதை பொருள் பாவனையை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு கேட்டு அறிந்தமையுடன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்பூட்டும் வேலை திட்டங்கள் உள்ளிட்ட 225 திட்டங்கள் தற்போது பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உப வேந்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, மாணவர்களுக்கிடையிலேயே குழுக்களை உருவாக்கி விழிப்புணர்வு வழங்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் பரவல் தொடர்பாக நாடளாவிய ரீதியில் ஆய்வு ஒன்றை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக கல்வி அமைச்சின் முன்னெடுப்பில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமித்து, பொதுவான திட்டமொன்றின் கீழ் செயற்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

default (39)

ஒன்டாரியோ தம்பதியினருக்கு சிறுவன் கொலை மற்றும் அவனது சகோதரர் மீதான ‘கடுமையான குற்றங்களுக்காக’ ஆயுள் தண்டனை

July 3, 2026

பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, பிராண்டி கூனி, பெக்கி ஹாம்பர் ஆகியோர் ‘பாதுகாப்பற்ற நிலையில் இருந்த நபர்களுக்கு’ தீங்கிழைத்துள்ளனர்

police rcmp

ஒட்டாவாவில் 14 மணித்தியாலங்களுக்கும் மேலாக பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பெண் பொலிஸாரால் மீட்பு

July 3, 2026

ஒட்டாவா குடியிருப்புப் பகுதி ஒன்றில் பாரிய பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் நிலவி வந்த பிணைக்கைதி விவகாரம், 14 மணித்தியாலங்களுக்கும் மேலான

canada rain

இந்த கோடைகாலத்தில் நிலவும் அதீத காலநிலை மாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள காரணம் என்ன?

July 3, 2026

இந்த கோடைகாலத்தில் கனடாவின் எந்தவொரு பகுதியை உற்று நோக்கினாலும், மக்கள் பல்வேறு வகையான தீவிர காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

X6NZHLCWWUNIWHTLIV5HUMMF6A

கியூபெக் நகர் அருகே காடுகளடர்ந்த பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 51 வயது பெண் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி: பொலிஸார்

July 3, 2026

கடந்த வாரம் காடொன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 51 வயதுடைய பெண், ஒரு கொலைக் குற்றத்திற்கு (homicide) ஆளாகியுள்ளார் என்று கியூபெக்

fire

பரி (Barrie) நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் ‘கணிசமான சேதம்’

July 3, 2026

வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தென்கிழக்கு பரி (Barrie) பகுதியில் உள்ள வீடொன்று ‘கணிசமான அளவில்’ சேதமடைந்துள்ளதாக

dr

அனைத்து அரச நிறுவனங்களும் போதைப் பொருள் ஒழிப்பு தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும்

July 3, 2026

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி

toronto poli

ஸ்கார்பாரோ பூங்காவில் கத்தியுடன் வந்த சந்தேகநபர் ஒருவர் நபர் மீது தாக்குதல்: பொலிஸார் தகவல்

July 3, 2026

ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொரண்டோ

kepa 11

கேப்பாப்புலவில் தங்களுக்குரிய பூர்விக நிலப்பரப்பை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க கோரி  ஞாயிற்றுக்கிழமை (5 ஆம் திகதி) போராட்டம்-பாதிக்கப்பட்டோர் அழைப்பு 

July 3, 2026

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் தங்களுக்குரிய பூர்விக நிலப்பரப்பை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க கோரி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (5 ஆம் திகதி)

735393744_122205327890574891_1122860786103625680_n

தொல். திருமாவளவன்-தமிழ் தேசியப் பேரவைசந்திப்பு

July 3, 2026

இன்று (03.07.2026) மாலை சுமார் 5.00 மணியளவில், சென்னை கேகே நகரில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில், தொல்.

8

கோவையில் செமி கண்டெக்டர் பூங்கா வருவது நிச்சயம் – அமைச்சர் கீர்த்தனா உறுதி

July 3, 2026

கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்னிந்திய மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, கோவையின் தொழில் வளர்ச்சிக்கான

7

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விலகல்

July 3, 2026

சென்னை: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்

peel poli

‘பாரிய’ சில்லறை விற்பனைத் திருட்டு விசாரணை குறித்த விபரங்களை வெளியிடவுள்ள பீல் பொலிஸார்

July 3, 2026

பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) வெள்ளிக்கிழமை காலை ஸ்கொயர் ஒன் மால் (Square One Mall) வணிக