சென்னை:
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை சகோதரர் என்று அழைத்துப் பதிவிட்ட ராகுல் காந்தியை, அந்த சகோதரரின் முதுகில்தான் வெட்கமே இல்லாமல் குத்தினீர்கள் என திமுக தொழில்நுட்பப் பிரிவு கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னை வருகை:
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை கூடும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், அதனை மாற்றிக்கொள்ள வலியுறுத்தி மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இன்று சென்னை வர உள்ளனர்.
ராகுல் காந்தி பதிவு மற்றும் மு.க.ஸ்டாலின் பதில்:
இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், சகோதரர் ஸ்டாலின் எப்போதுமே தமிழர்களுக்கு எதிரான சக்திகளைப் பாறை போல எதிர்த்து நின்றுள்ளதாகவும், ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், திமுகவின் பங்களிப்பை அங்கீகரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி கூறியதோடு, தமிழ்நாட்டின் நலன்களை முதன்மையாகக் கொண்டே முடிவுகளை எடுத்துள்ளதாகவும், வரலாறு தங்களை எட்டப்பன்களாக அல்லாமல் கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்றும் பதிவிட்டுள்ளார்.
திமுக தொழில்நுட்பப் பிரிவு தாக்கு:
இந்நிலையில் ராகுல் காந்தியை விமர்சித்துப் பதிவிட்டுள்ள திமுக தொழில்நுட்பப் பிரிவு, நீங்கள் குறிப்பிட்ட அந்த சகோதரரின் முதுகில்தான் வெட்கமே இல்லாமல் குத்தினீர்கள் மிஸ்டர் ராகுல் எனப் பதிவிட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்து வெளியேறியதும், மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பதிவில் சகோதரர் என ராகுல் அழைக்காததும் பேசுபொருளான நிலையில், தற்போது மீண்டும் சகோதரர் என அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
#DMK #RahulGandhi #MKStalin #DelimitationBill #INDIABloc #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive