சென்னை:
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதிருப்தி எம்எல்ஏக்கள்:
தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து பின்னர் மன்னிப்புக் கடிதம் வழங்கித் தகுதி நீக்கத்திலிருந்து தப்பிய 21 எம்எல்ஏக்களில் சிலர் கட்சி நிகழ்வுகளைப் புறக்கணித்து வந்தனர். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்த நிலையில், தேர்தல் பணிகள் ஒதுக்கப்படாததால் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அதிருப்தியில் இருந்தனர்.
தீவிர ஆலோசனை:
இந்நிலையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்குப் போர்க்கொடி தூக்கிய இவர்கள் தனியாகக் கூடி ஆலோசனை நடத்துவது, அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படுவதற்கான சூழல் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
#SPVelumani #CVShanmugam #AIADMK #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive