மதுரை
100 நாள் தவெக ஆட்சியில் மக்கள் அரசிடமிருந்து விலகத் தொடங்கிவிட்டார்கள் என்றும், சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கு முதல் வரிசையில் வி.வி.ஐ.பி அந்தஸ்து வழங்கப்பட்டதைக் குறிப்பிட்டு, அவரைத் துணை முதல்வராக்கப் போகிறாரா? என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“மக்கள் ஏன் விலகிச் செல்கிறார்கள்?”:
இது தொடர்பாகப் பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “100 நாள் தவெக ஆட்சியில் மக்கள் அரசிடமிருந்து விலகி இருக்கத் தொடங்கிவிட்டார்கள். அதற்கு முதல்வர் விஜய்யின் சுதந்திர தின விழா பேச்சே ஆதாரமாக அமைந்திருக்கிறது. ‘மக்கள் அரசோடு இணைந்து நிற்க வேண்டும்’ என்று அவர் ஏன் அப்படிப் பேசினார்? தவெக தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை பட்ஜெட்டில் கூட அறிவிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் என அனைத்திலும் முதல்வர் விஜய் மௌனம் காத்து வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது,” என்று சுட்டிக்காட்டினார்.
“த்ரிஷாவுக்கு முதல் வரிசையா? மானமே போச்சு!”:
சுதந்திர தின விழாவில் த்ரிஷா பங்கேற்றது குறித்து விமர்சித்த அவர், “நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதல் வரிசையில் முதல்வரைப் பெற்றெடுத்த தாய், தந்தைக்கு இடம் ஒதுக்கப்பட்டு, அருகிலேயே விஜய்யின் அன்புக்குரியவருக்கும் (த்ரிஷா) இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைய தலைமுறைக்கு முதல்வர் விஜய் சொல்லும் செய்தி என்ன? இது தமிழ்நாட்டிற்கே ஏற்பட்டுள்ள சாபக்கேடு. ஒரு தவறான முன் உதாரணத்தைச் சுதந்திர தின விழாவில் விஜய் அரங்கேற்றி இருக்கிறார்,” என்று சாடினார்.
“அடுத்து துணை முதல்வர் பதவியா?”:
தொடர்ந்து கடுமையாகப் பேசிய ஆர்.பி.உதயகுமார், “மாற்றம் கேட்டு வாக்களித்த மக்களுக்கு, சுதந்திர தின விழாவிலேயே தன் அன்புக்குரியவர்களை அடையாளப்படுத்தும் முதல் வரிசை அணிவகுப்பை அச்சமின்றி அரங்கேற்றி இருக்கிறார் முதல்வர் விஜய். தியாகத்தின் வடிவமான படை வீரர்களின் அணிவகுப்பினால் முதல்வருக்குக் கிடைத்த முதல் மரியாதையைத் தனது அன்புக்குரியவருக்கும் பகிர்ந்தளித்துள்ளார். ஒருவேளை தமிழ்நாட்டின் அரியணையையும் தனது அன்புக்குரியவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பாரோ? மேடம் த்ரிஷாவைத் தன் அரியாசனத்திற்குப் பக்கத்தில் துணை முதல்வராக அமர்த்தி விடுவாரோ? என்கிற அதிர்ச்சியில் ஒட்டுமொத்தத் தமிழகமே உறைந்து போயிருக்கிறது,” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
#RBUdhayakumar #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TVKGovernment #Trisha #TrishaKrishnan #AIADMK #DeputyCM #FortStGeorge #IndependenceDay2026 #TamilNaduNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates