2026 அக்டோபர் 26 திங்கள்கிழமை நகராட்சித் தேர்தலை முன்னிட்டு, டொராண்டோ பேராயர் கர்தினால் பிராங்க் லியோ (Cardinal Frank Leo) குறுங்காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டொராண்டோ பேராயத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் வேட்பாளர்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ளவும், பிரார்த்தனையுடன் சிந்தித்து மனசாட்சிப்படி வாக்களிக்கவும் அவர் ஊக்கமளித்துள்ளார்.
அக்காணொளியில் கர்தினால் லியோ, பொது நன்மைகளுக்காகப் பங்களிப்பது நமது கடமை என்பதை வலியுறுத்தியுள்ளார். மேலும், நமது கத்தோலிக்கப் பள்ளிகளின் விசுவாசத்தையும் தனித்துவத்தையும் பாதுகாப்பதில் கத்தோலிக்கப் பள்ளி வாரிய அறங்காவலர்களின் (Catholic School Board Trustees) முக்கியமான பங்கு குறித்தும் அவர் எடுத்துக் கூறியுள்ளார்.
கத்தோலிக்க வாக்காளர்கள் அனைவரும் தனிக் கத்தோலிக்கப் பள்ளி ஆதரவாளர்களாக வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு நினைவூட்டப்படுகிறார்கள். வரவிருக்கும் தேர்தலில் கத்தோலிக்கப் பள்ளி வாரிய அறங்காவலருக்கு வாக்களிப்பதற்கான தகுதிகள் மற்றும் பதிவு நடைமுறைகளைப் பற்றி மேலும் அறிய, தொடர்புடைய இணையதளப் பக்கத்தைப் பார்வையிடலாம்.
வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்களுக்காகவும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நமது நகராட்சிகளை வழிநடத்தவுள்ள தலைவர்கள் மற்றும் பள்ளி வாரிய அறங்காவலர்களுக்காகவும் நாம் பிரார்த்திப்போம்.