இன்று (03) மாலை ஹொரண, அங்குருவாதொட்ட பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அதேவேளை 44 பேர் மீட்கப்பட்டு, ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஹொரணையின் அங்குருவாதொட்ட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் மூன்று பேரைக் காணவில்லை என்றும், 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த விபத்தில் காயமடைந்த மற்றும் உடல்நலக் குறைபாடுகளுக்கு உள்ளான 55 பேர் கல்பாத மற்றும் ஹொறணை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவுவதைக் கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பல தீயணைப்பு வீரர்கள் முயன்று வருவதாகவும், அதே நேரத்தில் காணாமல் போன மூன்று பேரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த பலரின் உடல்கள் முதியோர் இல்லத்தின் உள்ளே காணப்படுவதாக அத தெரண (Ada Derana) செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் செய்யப்படவில்லை.