புதன்கிழமை (ஜூலை 01, 2026) இரவு ஸ்காபரோவில் (Scarborough) இடம்பெற்ற கத்திகுத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மெக்கோவன் வீதி (McCowan Road) மற்றும் நகெட் அவென்யூ (Nugget Avenue) பகுதிக்கு அருகிலுள்ள ஷெப்பர்ட் அவென்யூ ஈஸ்ட் (Sheppard Avenue East) பகுதியில் இரவு 9:55 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து படுகாயமடைந்த நிலையில் இருவர் மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். சந்தேகநபர்கள் குறித்த எந்தவொரு விபரத்தையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.