விண்வெளித் தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம்: ஐவர் உடல்சிதறி உயிரிழப்பு

தென் கொரியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஹன்வா ஏரோஸ்பேஸ்’ தொழிற்சாலையின் ஏவுகணை எரிபொருள் உற்பத்திப் பிரிவில் இன்று திங்கட்கிழமை (01) ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி ஐந்து ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

தென் கொரியாவின் டேஜியோன் நகரில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தத் திடீர் விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்து அந்நாட்டு சுகாதார மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விடுத்துள்ள விசேட செய்திக்குறிப்பில்,

வெடிப்புச் சம்பவத்தின் வீரியம் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் மிக மோசமாகச் சிதைவடைந்துள்ளதால், பலியானவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த ஐந்து பேரில் இருவர் 20 வயதுடைய தற்காலிக ஊழியர்கள் என்பதுடன், அனைவரும் ஹன்வா நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆவர்.

விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இருவரில் ஒருவர் மிகக் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இவர்கள் இருவரும் வெடிப்பு நிகழ்ந்த உடனே தொழிற்சாலையிலிருந்து தாங்களாகவே தப்பியோடி உயிர் பிழைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் ஏவுகணை எரிபொருளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளிலிருந்து வெடிபொருட்களை அகற்றுவதற்காக, தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போதே இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், தீ விபத்தை ஏற்படுத்திய இந்த வெடிப்பின் உண்மையான காரணம் குறித்து தீயணைப்புப் பிரிவினர் மற்றும் நிபுணர் குழுவினர் தொடர்ந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்து நடந்த ஹன்வா ஏரோஸ்பேஸ் தொழிற்சாலையானது பெரிய ரக உந்துவிசை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் மற்றும் ஏவுகணை எரிபொருள்களைக் கையாளும் மிக முக்கிய இராணுவத் தளமாகும். இதன் காரணமாக, நாட்டின் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் இத்தொழிற்சாலையின் உள் வரைபடத்தை அணுக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் சற்றுத் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, விபத்து குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் விபத்தை எதிர்கொள்ளவும், அதன் பின்னணியை ஆராயவும் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் திரட்டுமாறு அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மறுபுறம், விபத்து குறித்துப் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ள நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சோன் ஜே-இல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும், விசாரணை அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்துச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச பங்குச் சந்தையில் ஹன்வா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.8% ஆலும், அதன் தாய் நிறுவனமான ஹன்வா கோர்ப் நிறுவனத்தின் பங்குகள் 3.4% ஆலும் மதிய வர்த்தகத்தில் திடீர் வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்