தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) இனி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்லமாட்டார்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் ஃFox News தெரிவித்துள்ளதாக ஃFox News செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ட்ரம்ப் கூறுகையில்: “எல்லா துருப்புச் சீட்டுகளும் (cards) எங்களிடமே உள்ளன. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம், ஆனால் எவ்விதப் பயனுமில்லாத பேச்சுவார்த்தைகளுக்காக 18 மணிநேரம் விமானத்தில் பறந்து சென்று சும்மா அமர்ந்திருக்கப் போவதில்லை,” என்று குறிப்பிட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.