விருதுநகர்:
“தமிழகத்தில் இந்தத் தேர்தலில் ஏற்பட்ட ‘விஜய் சுனாமி’யில் சிக்கி வெற்றி வாய்ப்பை இழந்தவர்களில் நானும் ஒருவன்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பரபரப்பாகப் பேசியுள்ளார். விருதுநகரில் நடைபெற்ற அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களின் மனநிலையை மாற்றி, வாக்குகளைப் பெற முடியும் என்பதை வெளிநாடுகளில் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தற்போது அது தமிழகத்திலும் தவெக மூலம் அரங்கேறியுள்ளது. மக்கள் ஒரு மாயையில் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். இந்த 2026 தேர்தல் முடிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. தேர்தலில் விஜய் வாங்கிய வாக்குகள் அனைத்தும் அதிமுகவின் வாக்குகள் தான்; திமுகவின் வாக்கு வங்கி அப்படியே அவர்களிடம் தான் இருக்கிறது” என்றார்.
மேலும், அதிமுகவின் உட்கட்சி பூசல் குறித்துப் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக வந்து செயலாற்றுவது காலம் நமக்குத் தந்த கொடை. கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல்களைக் கட்சித் தலைமை முறைப்படி பார்த்துக் கொள்ளும். ஈபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று 1 கோடியே 30 லட்சம் பேர் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளார்கள். அதிமுகவை மக்கள் அவ்வளவு எளிதில் கைவிட மாட்டார்கள். எப்போதும் அதிகாரத்திலேயே இருந்தால்தான் கட்சியை நடத்த முடியும் என்ற நிலைமை அதிமுகவுக்கு இல்லை” என்று தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்.
#RajendraBalaji #ADMK_Crisis #VijayAsCM #TVK_ElectionWin #BreakingNews #May17 #TamilNaduPolitics #AiadmkSplit #VijayWave #EPS #VirudhunagarADMK #SocialMediaPolitics #ThalapathyVijay #TVK_Government #VoteBank #PoliticalAnalysisTN #AntiIncombency #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`