பொலிஸாரால் நேற்றைய தினம் (24.04.2026) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 964 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை 965 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், நால்வர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.