வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா முன்பாக இன்று (29) போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினமும் கறுப்புக்கொடிகளைத் தாங்கியவாறு பலாலி சந்திவரை ஊர்வலமாக போராட்டத்தை முன்னடுத்தனர்.

கறுப்புக் கொடிகளைக் கைகளில் ஏந்தியவாறு பலாலி சந்தி வரை பேரணியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.சுகிர்தன் வலி தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷ் ஆகியோரும் பங்குபற்றிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்,

காணி விடுவிப்பு தொடர்பில் காலங்களை இழுத்தடிக்காது, மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடியாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யுத்தம் காரணமாக 36 வருடங்களுக்கு முன்னர் வலி. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், யுத்தம் முடிவடைந்து, 17 வருடங்கள் கடந்த நிலையிலும் சொந்த மண்ணில் மீள் குடியேற அனுமதிக்கவில்லை.

தற்போதும் அந்த மக்கள், தமது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளிலும் , வாடகை வீடுகளிலும் தங்கி வாழ்கின்றனர்

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் காணிகளை விடுவிப்போம் என கூறி ஆட்சிக்கு அநுர அரசாங்கம் வந்து இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

17 வருடங்களாக யுத்தங்கள் இல்லாத போதிலும் மக்கள் இன்னமும் தெருக்களில் வாழ்கின்றார். இந்த அரசாங்கமும், முன்னைய அராஜக அரசாங்கம் போன்றே செயற்படுகின்றனர்.

எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், விடுவிக்கப்பட வேண்டிய காணிகளையும், இன்னமும் மீள் குடியேற்றப்படவுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்பில் விபரங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம். அதன் அடிப்படையில் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டிய தொடர் அழுத்தங்களை கொடுக்கவுள்ளோம்.

மக்களின் நியாமான கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிமடுத்து, மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் காலங்களை இழுத்தடிக்கும் வார்த்தைகளை தவிர்த்து, மக்களை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

crim

கையடக்கத் தொலைபேசியைக் கொடுக்காததால் 11 வயது தங்கை கொலை; 14 வயது அண்ணன் கைது

May 31, 2026

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றில், 11 வயதுடைய தனது சொந்தத் தங்கையைக் கழுத்தை நெரித்துக்

rain

இன்று பல பிரதேசங்களில் மழை

May 31, 2026

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை

dd

நடிகர் அஜித்தின் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

May 31, 2026

நடிகர் அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி

Agalagada

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூட பிக்குகள் – பௌத்த மக்கள் பிணைப்பை உடைக்க முடியவில்லை – அகலகட சிறிசுமன தேரர்

May 31, 2026

இலங்கையின் நீண்டகால வரலாற்றுப் பின்னணியில், பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் இடையிலான பிணைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்

fue

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

May 31, 2026

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்த

tamil

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

May 31, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

mass

பரவி வரும் மூளைக்காய்ச்சலைத் தடுக்க கல்வி அதிகாரிகளுக்கு வழிகாட்டும் அறிவுறுத்தல்கள்

May 31, 2026

தற்போது சில மாவட்டங்களில் பரவி வரும் என்டிரோவைரஸ் மூளைக்காய்ச்சல் எனப்படும் நோயை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, சுகாதார மற்றும்

har

பிரதமர் ஹரிணி பிரித்தானியாவில் தங்கியிருந்த இல்லம் குறித்தும் சர்ச்சை

May 31, 2026

இலங்கை அரசியல் களத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரின் பிரித்தானிய விஜயங்களின்

chann

தமிழ் இனப்படுகொலை நாட்டில் இடம்பெறவில்லை; ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களைக் கொன்ற ‘பிரிகேடியர் பால்ராஜ்’ ஐ பாராளுமன்றில் நினைவுகூர விட்டிருக்கக் கூடாது!

May 31, 2026

டாளுமன்றத்திற்குள் பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுவது குறித்தும் ஜனாதிபதி மற்றும் அரசு உடனடியாகத் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என

NT5WBSMVIZCQFAUVDLDAPULJTM

நோர்த் யார்க்கில் ‘வீட்டின் அருகிலேயே’ நபர் ஒருவர் சுட்டுக் கொலை (Formal Tamil)

May 30, 2026

நோர்த் யார்க்கில் (North York) உள்ள தனது வீட்டின் அருகிலேயே 27 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,

arrestt

பிராம்ப்டன் கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது

May 30, 2026

பீல் பிராந்தியம் (Region of Peel) – பிராம்ப்டனில் நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக ஒரு நபரை 21-வது

acc 12

மிசிசாகா 410 நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்து

May 30, 2026

மிசிசாகாவில் சனிக்கிழமை அதிகாலை, டெரி சாலைக்கு (Derry Road) அருகே, நெடுஞ்சாலை 410-இன் தெற்கு திசை பாதையில் (Highway 410