தமிழ் இனப்படுகொலை நாட்டில் இடம்பெறவில்லை; ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களைக் கொன்ற ‘பிரிகேடியர் பால்ராஜ்’ ஐ பாராளுமன்றில் நினைவுகூர விட்டிருக்கக் கூடாது!

டாளுமன்றத்திற்குள் பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுவது குறித்தும் ஜனாதிபதி மற்றும் அரசு உடனடியாகத் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவர் சன்ன ஜயசுமன வலியுறுத்தியுள்ளார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய விடயங்கள் குறித்துக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மே மாதம் 18ஆம் திகதி வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறி நினைவு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

எமது நாட்டில் தமிழ் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இருப்பினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுக்க இடமளித்துள்ளமை கவலையளிக்கின்றது.

தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷனல் அக்மீமன, நாடாளுமன்றத்தில் பத்திரிகை செய்திகளை மேற்கோள் காட்டி இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான போலிப் பிரசாரங்கள் சர்வதேச ரீதியில் நாட்டுக்குப் பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தில் நாடு பல்வேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலையும் உருவாக்கும். எனவே, இது குறித்து ஜனாதிபதி நாட்டுக்குத் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

இனப்படுகொலை நினைவுகூரல்கள் என்ற பெயரில் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளை நினைவுபடுத்தும் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தடையின்றி இடம்பெறுகின்றன.

இவ்வாறான நிகழ்வுகளில் பயங்கரவாதிகளின் சின்னங்கள், நிறங்கள் மற்றும் புகைப்படங்கள் பகிரங்கமாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இது தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் அறிந்திருந்தனவா? அவர்கள் அறிந்திருந்தால் இது குறித்து எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் என்ன? அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், யாருடைய அழுத்தத்தின் பேரில் அல்லது யாருடைய அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்புப் பிரிவினர் மௌனம் காக்கின்றனர் என்ற கேள்வியை நாங்கள் ஜனாதிபதியிடம் முன்வைக்கின்றோம்.

கடந்த மே 18 அன்று நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் முக்கியஸ்தரான பால்ராஜ் என்பவரை ‘பிரிகேடியர் பால்ராஜ்’ என நினைவு கூர்ந்து புகாராரம் சூட்டியுள்ளார்.

‘பிரிகேடியர்’ அந்தஸ்து என்பது இந்த நாட்டின் உத்தியோகபூர்வ இராணுவத்திலிருந்தவர்களுக்கு மட்டுமே உரித்தானது. பால்ராஜ் என்பவர் கடந்த 2000ஆம் ஆண்டு ஆனையிறவு இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி, ஆயிரக்கணக்கான இளம் இராணுவ வீரர்களின் உயிரைப் பறித்த ஒரு நபர்.

அத்தகைய நபர் ஒருவரை நாட்டின் உச்சமன்றமான நாடாளுமன்றத்தில் நினைவு கூர இடமளித்தது எந்தவகையில் நியாயம்? குறிப்பாக, அந்தத் தருணத்தில் நாடாளுமன்றத்தின் சபாபீட தலைமைத்துவத்தை வகித்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, இந்தப் பயங்கரவாதியை நினைவு கூரும் போது ஏன் எவ்வித தடுத்தல் நடவடிக்கையும் எடுக்கவில்லை? நாடாளுமன்றத்தின் தலைமைத்துவத்துக்குப் பொறுப்புக்கூறும் கடப்பாடு உண்டு.

பால்ராஜை பிரிகேடியராகக் கருதுவதால்தான் அவர் மௌனம் காத்தார்களா? ஜனாதிபதி அவர்களே, உங்கள் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகரவைப் போலவே, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிரிழப்புக்குக் காரணமான அந்தக் கொலைகாரனை நீங்களும் பிரிகேடியராகவே கருதுகிறீர்களா? இல்லையா? என்பதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை

Untitled-5

தொடர் விடுமுறை: 2,354 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – விதிகளை மீறிய 400 ஆம்னி பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையையொட்டிப் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காகக் கிளாம்பாக்கத்திலிருந்து 2,354 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில்,

2

பரந்தூரைப் போல பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்திலும் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்: எம்.பி. துரை வைகோ நம்பிக்கை!

September 13, 2026

திருச்சி: திருச்சி மாவட்டம் கே.கள்ளிக்குடி ஊராட்சியில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய

725c2e6d9fca0dc4aada0ee563cfb1b495b36e3eddff80882083ace68426ca4f

மலேசியப் பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்க ஆளுநர் மாளிகை கோரிக்கை: பரபரப்புத் தகவல்!

September 13, 2026

சென்னை: புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமைச் சந்திப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்குமாறு

1200-675-26766517-thumbnail-16x9-trichy2-aspera

“ஆபாசமாகப் பேசுவதுதான் திமுகவின் அரசியல்!” – சேகர்பாவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

September 13, 2026

சென்னை: அரசியல் என்ற பெயரில் ஆபாசத்தையும், அவதூறையும் பேசுவதையே திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

தூத்துக்குடி கப்பல் கட்டும் தள எதிர்ப்பு: செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்காமல் நழுவிய அமைச்சர் ஸ்ரீநாத்!

September 13, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமையவுள்ள புதிய கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து

HSBts-6bwAAGySO

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற சர்வதேசக் கார் பந்தயம்: இங்கிலாந்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

September 13, 2026

லண்டன் / சென்னை: தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைப்பதற்கான முன்னோட்டமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்