நயினாதீவு கடலில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு; படகோட்டிக்கு விளக்கமறியல்!

படகில் பயணிக்கும் போது, நயினாதீவு கடலில் தவறி விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி, நேற்று (28) மாலை படகில் பயணித்துக்கொண்டிருந்த வேளை கடற்சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலினுள் தவறி விழுந்து 48 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் படகோட்டியை கைது செய்து, […]

மெனிஞ்சைடிஸ் பரவல்: பாடசாலைகளுக்கு விசேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

தற்போது சில மாவட்டங்களில் பரவி வரும் ‘எண்டிரோவைரஸ் மெனிஞ்சைடிஸ்’ (Enterovirus Meningitis) நோய் நிலைமையைக் கட்டுப்படுத்துவது குறித்து எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டுதல்களை, சுகாதார மற்றும் ஊடக அமைச்சுடன் இணைந்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கியுள்ளது. இந்த நோய் முக்கியமாக சிறுவர்களையும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்களையும் அதிகமாகப் பாதிப்பதாக அந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்தறை […]

ஜனவரி முதல் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியது

ஜனவரி மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. இதற்கமைய, ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (28) வரையான காலப்பகுதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,010,807 ஆகப் பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மே மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 134,530 ஆகும். மே மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் […]

நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி தற்கொலைக்கு முயற்சி?

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய அவருக்கு மரண […]

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா முன்பாக இன்று (29) போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது. யுத்தம் […]

பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளத்திருந்து காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் அமைச்சரின் பணிப்பு

பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27) இரவு சுமார் 11.00 மணியளவில் இரண்டு படகுகளில் கடலுக்கு சென்ற குறித்த மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதால், அவர்கள் பயணித்த படகுகள் கரைக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் பிரதேச […]

விலை நிர்ணய உறுதிமொழியுடன் இலங்கையின் இணக்கக் கடிதத்தை வெளியிட்டது IMF

விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ், ஐந்து மற்றும் ஆறாவது ஆய்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கமும் மத்திய வங்கியும் சமர்ப்பித்த இணக்கக் கடிதத்தை (Letter of Intent) சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ளது. 2026 மே 13 தேதியிட்ட இந்தக் கடிதத்தில் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுர குமார திஸாநாயக்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இதில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் மறுசீரமைப்பை நோக்கமாகக் […]

நாமலின் கிரிஷ் (Krrish) நிறுவன வழக்கு விசாரணை ஜூலை 7-ஆம் தேதிக்கு நிர்ணயம்

சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை, 2026 ஜூலை 7-ஆம் தேதியன்று நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று காலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கிற்கு முன்னதான மாநாடு (Pre-trial conference) நிறைவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூலை மாதம் வழக்கின் விசாரணைகளைத் தொடங்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். குற்றச்சாட்டுகளின் […]

பாரி (Barrie) நகரில் வாகன சோதனையின் போது போதைப்பொருள் மற்றும் பணம் பறிமுதல்: ஒருவர் மீது வழக்குப்பதிவு

பாரி நகரின் கிழக்கு முனையில் அதிகாலையில் நடத்தப்பட்ட வாகன சோதனையை அடுத்து, கிரேவன்ஹர்ஸ்ட் (Gravenhurst) பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் மீது போதைப்பொருள் தொடர்பான பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சம்பவத்தின் பின்னணி: மே 26, செவ்வாய்க்கிழமை அதிகாலை 1:30 மணியளவில், டக்வொர்த் வீதி மற்றும் ஈஸ்ட் குரோவ் வீதி (Duckworth Street and Grove Street East) சந்திப்பில் ஒரு பெண் சிவப்பு விளக்கை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றபோது போலீசாரால் நிறுத்தப்பட்டார். சோதனையின் […]

மிரட்டிப் பணம் பறித்தல் தடுப்பு: பீல் பிராந்திய காவல்துறையின் அதிரடி நடவடிக்கை

மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion) என்பது தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் பாதிக்கிறது. ஒருங்கிணைந்த மற்றும் எல்லை கடந்த விசாரணையின் மூலம், வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமான ஒரு திட்டமிடப்பட்ட குற்றக் கும்பலை (Organized crime group) பீல் பிராந்திய காவல்துறை மற்றும் அதன் சட்ட அமலாக்கக் கூட்டாளிகள் முறியடித்துள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுப் பொறுப்பேற்கச் செய்யப்பட்டுள்ளனர். முக்கியக் குறிப்புகள்: பூஜ்ஜிய சகிப்புத்தன்மை (Zero-tolerance): குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் […]