வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்புக்கு எதிர்ப்பு

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூலினை வழங்குவதற்கு நிறுவனம் ஒன்று வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரிய நிலையில், பாடசாலைகளில் மாணவர்களுக்கு நூலினை அன்பளிப்பு செய்வதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.

குறித்த அனுமதி கடிதம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாடசாலைக்குள் மத மாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது குறித்த கிறிஸ்தவ சபையை சேர்ந்த மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குமாறு கடிதம் மூலம் பைபிளை வழங்க முற்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல் பாடசாலை மட்டங்களில் எவ்வாறு பின் பற்றப்படும், கிறிஸ்தவ சபையை சேர்ந்தவர்களுக்கு எனில், அதனை அவர்களின் சபைகள் ஊடாகவே வழங்க நடவடிக்கை எடுக்காது எதற்காக பாடசாலைகளில் வைத்து வழங்க வேண்டும்?

பாடசாலைகள் ஊடாக வழங்கப்பட காரணம் மாணவர்களை மதமாற்றம் செய்யும் நோக்கு என்பதனை வலுவாக சந்தேகிக்க கூடிய ஏது நிலைகள் காணப்படுவதனால் பாடசாலைகளில் பைபிளை வழங்குவதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரி வருகின்றனர்.

இந்நிலையில் வடமாகாண பாடசாலை மாணவர்கள் மத்தியில் கிறிஸ்தவ சபையின் பைபிள் வழங்கப்படுவதனை வடமாகாண ஆளுநர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் அத்தனையும் மீறி பைபிள் மாணவர்கள் மத்தியில் வழங்கப்பட்டால், அவ்வாறு வழங்கப்படும் பைபிளை தீயிட்டு கொளுத்துவோம் என சிவசேனை அமைப்பினை சேர்ந்த சிறிந்தீரன் மற்றும் மாதவன் ஆகியோர் யாழில்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அவ்வாறான நிலையில் தற்போது யாழ் , நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பைபிள் வழங்கப்படுவதற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

har

நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை – ஹரீன்

March 18, 2026

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய

pra

பண்டாரவளை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்

March 18, 2026

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

rav

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரம் : ரவிகரன் ஜனாதிபதிக்கு கடிதம்

March 18, 2026

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (14) வன்னி

chi

இணையத்தள மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்பட சீனா தயார்

March 18, 2026

தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தள மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் சீனா உறுதியுடன் செயல்பட்டு வருவதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையுடன் சட்ட அமுலாக்க

amb

அக்கரைப்பற்று பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு!

March 18, 2026

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இன்று (18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால்

toru

சுற்றுலாத் துறை அமைச்சின் விசேட அறிவிப்பு

March 18, 2026

சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவைகளுக்காகப் பதிவு செய்யும் முறைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு

us

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

March 18, 2026

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையமான ‘கிரீன் ஸோன்’ பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகம் மீண்டும்

Sigh

குடிவரவு மோசடி சந்தேக நபர் விடுவிக்கப்பட்டு கனடா மீது வழக்குத் தொடர அனுமதி

March 18, 2026

40 வயதான இந்தியரான குர்பிரீத் சிங், கனடா அரசாங்கம் மற்றும் கனடா எல்லைச் சேவைகள் முகமையின் (CBSA) ஊழியர்கள் மீது

Gro

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

March 18, 2026

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

chal

இலங்கையை நோக்கி வரும் நிலக்கரி கப்பல்கள்

March 18, 2026

எதிர்பார்க்கப்படும் வறட்சி அல்லது நிலக்கரி இறக்குமதி தாமதங்கள் காரணமாக, நாட்டின் மின்சார விநியோகத்துக்கு இதுவரை எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று

da

ஒன்டாரியோவில் Canada Goose இன் செயற்பாடுகள் – முதல்வர் டக் பேர்ட்

March 18, 2026

புகழ்பெற்ற கனடிய நிறுவனமான Canada Goose ஒன்டாரியோவில் தொடர்ந்து வளர்ந்து, இங்கிருந்தே நல்ல ஊதியமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி

arre

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக பல கோடி ரூபா மோசடி

March 18, 2026

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் 4 கோடி 97 இலட்சத்து 9 ஆயிரத்து 30 ரூபாயை மோசடி