ரொறன்ரோவின் பிரைடில் பாத் பகுதியில் தந்தை மற்றும் 2 மகள்கள் மீது துப்பாக்கி சூடு

வியாழக்கிழமை அதிகாலை ரொறன்ரோ நகரின் உயர்தர குடியிருப்புப் பகுதியான பிரைடில் பாத் (Bridle Path) பகுதியில் இடம்பெற்ற கொடூரமான வீட்டு ஊடுருவல் சம்பவத்தில், ஒரு தந்தையும் அவரது இரு  மகள்களும் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைத்துப்பாக்கிகள் மற்றும் சுத்தியலுடன் முகமூடி அணிந்த மூன்று சந்தேகநபர்கள், அதிகாலை 3:45 மணியளவில் பேவியூ மற்றும் லாரன்ஸ் அவென்யூஸ் அருகே அமைந்துள்ள ஹைட் பார்க் சேர்க்கிளில் உள்ள வீட்டின் பின்புறக் கதவு வழியாக உள்ளே நுழைந்துள்ளனர்.

வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரு  மகள்களை அச்சுறுத்தியுள்ளனர். இதன்போது ஏற்பட்ட மோதலில் தந்தையும் இரு மகள்களும் சுடப்பட்டுள்ளனர். அத்துடன், ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நால்வரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முதல் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

பாதிக்கப்பட்ட இருவரின் காயங்கள் ஆரம்பத்தில் உயிருக்கு ஆபத்தானவை என பொலிஸார் தெரிவித்திருந்த போதிலும், தற்போது அவர்களின் காயங்கள் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை (Life-altering) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தேகநபர்களின் விரிவான அடையாளங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை, எனினும் அவர்கள் SUV ரக வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அச்சமும் அதிர்ச்சியும் அளிக்கிறது’

சம்பவ இடத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ரொறன்ரோ பொலிஸ் சேவையின் கொள்ளை தடுப்புப் பிரிவின் ஆய்வாளர் கிறிஸ்டி ஸ்மித்:

“இது ஒரு தீவிரமான விசாரணையில் உள்ள சம்பவமாகும். சந்தேகநபர்கள் பற்றிய விரிவான தகவல்கள் தற்போது எம்மிடம் இல்லை என்றாலும், அடையாளம் காணப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் குறித்து சாத்தியமான தகவல்களை வழங்க எம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்.

இத்தகைய சம்பவம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி, அப்பகுதி மக்கள் மற்றும் முழுச் சமூகத்திற்கும் எவ்வளவு அச்சத்தையும் அதிர்ச்சியையும் தரும் என்பதை நாங்கள் உணர்கிறோம். மக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக உணர வேண்டும்.”

கொள்ளையர்கள் வீட்டின் பெறுமதியான பொருட்களைக் கேட்டு மிரட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட ஸ்மித், அவர்கள் எதையாவது திருடிச் சென்றார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார்.

வாகனத் திருடர்கள் பெரும்பாலும் உயர்சொகுசு வாகனங்களைத் திருடுவதற்காக வீடுகளுக்குள் நுழைவது வழக்கம் என்றும், இந்த வீடு குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கப்பட்டதா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும், உயர்தரப் பகுதிய என்பதால் பெறுமதியான பொருட்கள் இருக்கும் என்ற நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே துப்பாக்கிக் காயத்துடன் உள்ளூர் மருத்துவமனைக்கு வந்த நபருக்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

‘நம்பவே முடியவில்லை’

இச்சம்பவம் குறித்து அப்பகுதிவாசியான செசில் ஹோக்கின்ஸ் கருத்து தெரிவிக்கையில், “இது ஒரு கொடூரமான அதிர்ச்சியும் சோகமுமாகும். அந்த வீட்டின் உரிமையாளர் மிகவும் அன்பான, சமூக அக்கறை கொண்ட பெண்மணி. அவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நல்ல பாதுகாப்பு வசதிகள் உள்ளன. அப்படியிருந்தும் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது நம்பவே முடியாத அதிர்ச்சியாக உள்ளது,” என்றார்.

மேயர் மற்றும் கவுன்சிலர் கவலை

ரொறன்ரோ மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) வெளியிட்ட அறிக்கையில்:

“பிரைடில் பாத் பகுதியில் அதிகாலையில் நடந்த வன்முறை வீட்டு ஊடுருவல் சம்பவம் என்னை ஆழ்ந்த கவலையடையச் செய்துள்ளது. எந்தவொரு குடும்பமும் சந்திக்கக்கூடாத ஒரு சூழலை எதிர்கொண்டுள்ள அந்த குடும்பத்தினருக்காகவும் அவர்களின் அன்பிற்குரியவர்களுக்காகவும் எனது பிரார்த்தனைகள். அவர்கள் விரைவில் முழுமையாக குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

இந்தத் தாக்குதல் அந்தப் பகுதியையும் ரொறன்ரோ மக்களையும் உலுக்கியுள்ளது. எமது நகரில் இத்தகைய வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. ரொறன்ரோ பொலிஸாரின் விசாரணைக்கு எனது முழு ஆதரவும் உண்டு.”

அப்பகுதி நகரசபை உறுப்பினரான ரேச்சல் செர்னோஸ் லின் தெரிவிக்கையில், “ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கத் தகுதியானவர்கள். இத்தகைய வன்முறைச் செயல் மிகவும் கவலையளிக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்

child-abuse-copy

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விற்பனை; 30 வருட சிறைத்தண்டனை

October 31, 2026

பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்தமை தொடர்பில் பாணதுறை மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட

h

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

October 31, 2026

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார

Jo

வடக்கு ஆளுநர் வேதநாயகன் மீது ஊழல் குற்றச்சாட்டு; விசாரணை செய்யுமாறு ஜோசப் ஸ்டாலின் முறைப்பாடு

October 31, 2026

தற்போதைய வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ் மாவட்ட அரச அதிபராக கடமை ஆற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில்

chan

மீன்பிடித்துறை அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள்; இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம்!

October 31, 2026

இலங்கையின் மீன்பிடித்துறை கள உத்தியோகத்தர்களுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய

af

கனடாவின் தேசிய பாதுகாப்பு: புதிய மூலோபாயத் திட்டம் வெளியீடு!

October 30, 2026

உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், இணையத் தாக்குதல்கள், வெளிநாட்டுத் தலையீடுகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், கனடாவின்

8

“அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா?” – மு.க.ஸ்டாலின் பதில்!

October 30, 2026

சென்னை: அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை மற்றும் பெருந்துறை ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும்

7

“தவெக ஆட்சியில் வாழவும் முடியவில்லை; சாமி கும்பிடவும் முடியவில்லை!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

October 30, 2026

மதுரை: தமிழகத்தில் தவெக ஆட்சியில் யாராலும் நிம்மதியாக வாழவும் முடியவில்லை, நிம்மதியாகச் சாமி கும்பிடவும் முடியவில்லை என அதிமுக பொதுச்செயலாளர்

6

“நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது!” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

October 30, 2026

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு

1200-675-27993440-thumbnail-16x9-min-keer

“சிவகாசியில் ரூ.10 கோடியில் வீடு வாங்கி உள்ளேனா?” – அட்ரஸ் கேட்ட அமைச்சர் கீர்த்தனா!

October 30, 2026

சிவகாசி: சிவகாசியில் நடைபெற்ற வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்ட தொடக்க விழாவில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா

sekarkala-2026-10-28-11-01-24 (1)

“போலீஸ் முன் ஆஜரானார் சேகர்பாபு!” – அன்பில் மகேஷ் கைதின்போது வாக்குவாதம் செய்த வழக்கில் ஆஜர்!

October 30, 2026

சென்னை: முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டபோது, காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள்

865382827_3508537375986522_4676468461321359473_n - Copy

“கண்காணிப்பு வளையத்தில் அமைச்சர்கள்: முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை!”

October 30, 2026

சென்னை: அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் அமைச்சர்கள் தலையிடக் கூடாது என்றும், மீறினால் இலாகா மாற்றம் செய்யவும் தயங்க மாட்டேன் என்றும்

2

“விஜய் ஹிட்லரை போன்று செயல்பட்டு வருகிறார்” – கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

October 30, 2026

கிருஷ்ணகிரி: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் ஒரு சர்வாதிகாரியான ஹிட்லரைப் போன்று செயல்பட்டு வருவதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி