ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்ட மூலம் புலனாய்வு ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பதற்கான சட்டபூர்வமான பின்னணியை வழங்ககூடும்.- சுதந்திர ஊடக இயக்கம்

கருத்துசுதந்திரம்,ஏனைய அடிப்படை உரிமைகள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பிற்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை எதிர்ப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. சுதந்திர ஊடக இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்ட சட்டமூலத்தில் உள்ள ஊடக சுதந்திரம் மற்றும் புலனாய்வு இதழியல் ஆகியவற்றை குற்றச்செயல்களாக கருதுவதற்கு வழிவகுக்க கூடிய ஏற்பாடுகள் குறித்து அதிக கரிசனை கொண்டுள்ளது. முன்மொழியப்பட்ட சட்டமூலமானது முன்அனுமதி பெறாமல் கடுமையான அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி […]

அரசாங்கம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கநேரிடலாம் – சஜித் எச்சரிக்கை

அரசாங்கம் ஒடுக்குமுறை பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்தினால் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கவேண்டிய நிலையேற்படலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார் எதிர்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது விசேட அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது பொதுமக்களின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையை மூடி மறைப்பதற்கும் அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கம் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்த முயல்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத சட்டத்தினை அதற்கு பதிலான கடுமையான சட்டத்தின் மூலம் மாற்றீடு செய்வதை விட […]

முன்னாள் அமைச்சர் விஜயதாசவின் மகனின் வங்கி கணக்குகள் முடக்கம் –

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரக்கித ராஜபக்சவின் வங்கிகணக்குகளை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்செயல்கள் மூலம் பெறப்பட்டபணம் சொத்துக்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்டுள்ள விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் வங்கி கணக்கு முடக்கப்படுவது குறித்த அறிவிப்பை கையளிப்பதற்காக முன்னாள் அமைச்சரின் மகனின் நாவல வீட்டிற்கு சென்றவேளை அவர் அங்குஇருக்கவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்

பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (30) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அனைத்து அரசுப் பல்கலைக்கழக அமைப்புகளிலும் இந்த பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அச்சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார். அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை, ஊழியர்கள் மீதான அதிக பணிச்சுமை, போதுமான பௌதிக வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்குச் இணையாக நாளை பல்கலைக்கழக […]

ஆனந்தபுரத்தில் விட்டுச்செல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர்!

இலங்கை இராணுவம் 2009 ஏப்ரல் மாதம் ஆனந்தபுரத்தைக் கைப்பற்றியபோது கடுமையாகக் காயமடைந்த நிலையில் ஒரே கட்டடத்துக்குள் விட்டுச்செல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரில் தப்பிப்பிழைத்தவர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டு, ‘ஆனந்தபுர மோதல்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனந்தபுரத்தின் முற்றுகையிடப்பட்ட பகுதியின் கிழக்குப் புறமாக இருந்த கணினி மையப்பகுதியில் […]

இங்கிலாந்துக்கு எதிராக பவன் ரத்நாயக்க மீண்டும் அபார சதம்!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் இளம் வீரர் பவன் ரத்நாயக்க அதிரடியாக விளையாடி தனது சதத்தைப் பதிவுசெய்துள்ளார். இப்போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 387 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலளித்தாடி வரும் இலங்கை அணிக்கு, மத்திய வரிசையில் களமிறங்கிய பவன் ரத்நாயக்க திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 70 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் […]

உலக புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்

புகழ்பெற்ற ‘ஸ்டார் டிரெக்'(Star Trek) நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் தமது 86 வது வயதில் காலமானார். லொஸ் ஏஞ்சலஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் கடந்த சில காலமாக ‘அல்சைமர்’ மற்றும் டிமென்ஷியா’ ஆகிய நினைவாற்றல் பாதிப்பு நோய்களுடன் போராடி வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. ‘ஸ்டார் டிரெக்’, ‘எக்ஸ்-மென்’ மற்றும் ரோயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்தில் தனது திறமையை வெளிப்படுத்திய ஸ்டீவர்ட், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு கலைப் […]

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள 86 ஆம் இலக்கக் கட்டளையை மீறி, நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை வழங்காமை தொடர்பிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வழக்கு புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்குச் அழைப்பாணை பிறப்பித்த நீதிமன்றம், இந்த வழக்கை நவம்பர் 11 ஆம் […]

தடுப்புக் காவலில் கைதி உயிரிழப்பு: பொலிஸ் தரப்பில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன!

ஹோமாகம பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த இஷார என்ற நபர் கைது செய்யப்பட்ட விதம் மற்றும் அதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்கள் குறித்துப் பொலிஸார் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். இது குறித்து மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், கைதுசெய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் கிராமத்தினரால் தாக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர், தான் சைக்கிளிலிருந்து கீழே […]

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தேசிய நிகழ்ச்சித் திட்டம்

இலங்கைப் பெண்களிடையே அதிகம் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மற்றும் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் தலைமையில் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விசேட தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவியான அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நடைபெற்ற குறித்த சங்கக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய் தொடர்பான […]