ரூ.23,000 மில்லியன் மதிப்பிலான சமூக சக்தி தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை

நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்திற்காக 2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 25,000 மில்லியன் ரூபாய் நிதியில், இதுவரை 23,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாழ்வாதார அபிவிருத்தி, உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய, சமூக அபிவிருத்தி சபைகளினால் முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்காகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“சமூக சக்தி” தேசிய திட்டத்தின் இதுவரைக்கால முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

கிராமப்புற வறுமையை ஒழிப்பது மற்றும் கிராமிய சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாகச் செயற்படுத்தப்படும் “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றத்தை இங்கு ஆராய்ந்த ஜனாதிபதி, இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் இது எந்தளவு பங்களிப்பு செய்கிறது என்பது குறித்து தொடர்ச்சியான மீளாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் இதுவரை 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவி முடிக்கப்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய அதிகாரிகள், அந்தச் சபைகளுக்காக வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

“சமூக சக்தி” தேசிய திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள சமூக சக்தி பிரிவுகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், சமூக அபிவிருத்தி சபை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படும் பயிற்சித் திட்டங்கள் குறித்தும் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த