ராமதாஸ்-சசிகலா கூட்டணி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரி வந்தார். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் தானே பொதுச்செயலாளர் என்று கூறி வந்த சசிகலா, இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்தார்.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக புதிய கட்சி தொடங்குவதாக சசிகலா அறிவித்தார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ள கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். தனது கட்சியின் பெயர் ‘அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்று சசிகலா அறிவித்தார்.

இதற்கிடையில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும், மே 4 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

சமீபத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் உள்ள தைலாபுரம் இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், 2026 தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியா? தனித்துப் போட்டியா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஒருபுறம் அன்புமணி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததையடுத்து, ராமதாஸ் தரப்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், புதிதாக கட்சி தொடங்கிய சசிகலா, கடந்த 11 ஆம் திகதி ராமதாசை தைலாபுரம் இல்லத்தில் சசிகலா சந்தித்து பேசியிருந்தார். அப்போது கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட ராமதாசுக்கு சசிகலா அழைப்பு விடுத்தார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்தித்து சசிகலா ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பின்போது பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து, ராமதாஸ்-சசிகலா கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து சசிகலா மற்றும் ராமதாஸ் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ராமதாசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக சசிகலா அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய ராமதாஸ், “அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் தேர்தல் உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது. தமிழக மக்களின் நன்மைக்காக கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றிக்கான கூட்டணி. தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்.

எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கும் கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்கலாம். எங்கள் கூட்டணிக்கு வர விரும்புவோர் எங்கள் இருவருடன் கலந்து ஆலோசிக்கலாம். தமிழகத்தில் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலன், சுயமரியாதைக்காக இந்த கூட்டணி செயல்படும்” என்று தெரிவித்தார்.

Hemarathne

பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்: 22ஆம் திகதி வரை பிக்குவுகடகு விளக்கமறியல்!

May 14, 2026

15 வயது சிறுமி ஒருவரை தவறானமுறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, வரும் 22ஆம் திகதி

hu

பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்!

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்