யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண் பிரான்ஸில் துணை மேயரானார்

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை திங்கட்கிழமை ( 23 ) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் இந்த வளர்ச்சி, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா, 19 வயதிலேயே நகர மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர், தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட்டு, மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டதன் பலனாக தனது 25 ஆவது வயதில் துணை மேயர் பதவியை அடைந்துள்ளார்.

அவரது இந்த முன்னேற்றம், இளம் தலைமுறையினருக்கு அரசியல் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட ஊக்கமளிக்கும் சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

மேலும், பல்துறை சமூகத்துடன் இணைந்து செயல்படுவதிலும், உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர் உதவித் திட்டம் தொடர்பில் ஒன்றாரியோவில் எதிர்க்கட்சிகள் அழுத்தம்

ஒன்டாரியோ மாணவர் உதவித் திட்டத்தில் (OSAP) ஃபோர்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள சர்ச்சைக்குரிய மாற்றங்களை திரும்பப் பெறக் கோரி, எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, குயின்ஸ் பார்க் (Queen’s Park) சட்டமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில் இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் (Grants) பெருமளவு குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கடன்கள் (Loans) அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 85 சதவீதமாக இருந்த மானிய உதவி, இனி 25 சதவீதமாக குறைக்கப்படும். மீதமுள்ள 75 சதவீத நிதியை மாணவர்கள் கடனாகவே பெற முடியும். ஏழு ஆண்டுகளாக அமலில் இருந்த கல்விக் கட்டண முடக்கம் (Tuition freeze) நீக்கப்பட்டு, கட்டண உயர்வுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சி (NDP) மற்றும் பசுமைக் கட்சி (Greens) ஆகியன இன்று காலை இது தொடர்பான தீர்மானங்களை முன்வைத்தன: இந்த மாற்றங்களை உடனடியாக ரத்து செய்து, பழைய முறையையே தொடர வேண்டும் என வலியுறுத்துகிறது.

மாணவர் கடன்களுக்கான வட்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய மாணவர்களுக்குத் திரும்பச் செலுத்தத் தேவையற்ற மானியங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் கோருகிறது. இளைஞர் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள சூழலில், மாணவர்கள் பெரும் கடன் சுமையுடன் பட்டப்படிப்பை முடிக்க நாங்கள் விரும்பவில்லை,” என பசுமைக் கட்சித் தலைவர் மைக் ஷ்ரைனர் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் துறை அமைச்சர் நோலன் குவின் (Nolan Quinn), தற்போதைய OSAP நடைமுறை “நீடிக்க முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அடுத்த நான்கு ஆண்டுகளில் கல்வித் துறைக்காக மேலதிகமாக 6.4 பில்லியன் டொலா் நிதி ஒதுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த மாற்றங்கள் உயர்கல்வியை எட்டாக்கனியாக்கும் என்றும், வாழ்நாள் முழுவதும் தீர்க்க முடியாத கடன் சுமைக்கு மாணவர்களைத் தள்ளும் என்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை நடைபெறவுள்ள “எதிர்க்கட்சிகள் தினத்தில்”, NDP மற்றும் லிபரல் கட்சிகள் இந்த விவகாரத்தை மீண்டும் சட்டமன்றத்தில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்

IMG_9425

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

October 14, 2026

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கையர்கள் தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன்

IMG_9424

ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

October 14, 2026

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலை மற்றும்

nsm

மீண்டும் விளக்கமறியலில் நாமல்!

October 14, 2026

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற

wor

உலக வங்கிப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

October 14, 2026

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர்

th

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக திக்கம் வடிசாலையை மீளச் செயற்படுத்தத் திட்டம்!

October 14, 2026

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக

ja

கைதடியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி

October 14, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

kek

நீதிமன்ற அவமதிப்பு – கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மனு

October 14, 2026

யர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட

MediaFile_20261013_115703_992

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

October 14, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக

Toronto-Election-1536x783

அக்டோபர் 26 நகராட்சித் தேர்தலில் கத்தோலிக்கர்கள் பங்கேற்க கர்தினால் லியோ அழைப்பு!

October 13, 2026

2026 அக்டோபர் 26 திங்கள்கிழமை நகராட்சித் தேர்தலை முன்னிட்டு, டொராண்டோ பேராயர் கர்தினால் பிராங்க் லியோ (Cardinal Frank Leo)

TORONTO ELE1

டொராண்டோ நகராட்சித் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்க சாதனை அளவிலான வாக்காளர்கள்

October 13, 2026

டொராண்டோவின் வரவிருக்கும் 2026 நகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற ஆறு நாள் முன்கூட்டிய வாக்குப்பதிவில் 2,20,000-க்கும் மேற்பட்ட