யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தைக் குழப்ப முயற்சி… – சிவயோகநாதன்

ர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும் அதனுடைய வலுவையும் குறைப்பதற்கான சில வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம். எனவே அவைகள் தவிர்க்கப்பட வேண்டும், நிறுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் சபாரெத்தினம் சிவயோகநாதன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இந்த ஊடக சந்திப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். அன்றைய தினத்தில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமானது யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் அன்றைய தினத்தினை ஒரு சர்வதேச மாநாடாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்து செய்துள்ளார்கள்.

எனவே அன்றைய தினத்தில் நடைபெற இருக்கின்ற அந்த மாநாட்டில், தமிழ் பேசும் மக்களாக, தமிழர்களாக நாங்கள் அன்றைக்கு அந்த மக்களுக்கு நடந்த இன அழிப்பின் ஒரு அங்கமாக அந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது உறவினர்கள் கையில் ஒப்படைக்கப்பட்ட உறவினர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

பொறுப்பு வாய்ந்த அரசினுடைய முப்படைகளினுடைய கைகளில் ஒப்படைக்கப்பட்ட அந்த அப்பாவி மக்கள் கூட காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் சிறுகுழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வயது முதிர்ந்த முதியவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அருட்தந்தையர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது மிகவும் உலகத்திலேயே இரண்டாவதாக அதிகமான மனிதர்கள் காணாமல் ஆக்கப்பட்ட நாடு என்ற ஒரு பட்டியலை இந்த இலங்கை அரசாங்கம் ஸ்ரீலங்கா பெற்றிருக்கின்றது. அது எம்மை பொறுத்தவரையில் மிகவும் வேதனையான ஒரு கவலையான ஒரு விடயமாகும்.

எனவே இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு எதிராக சில சக்திகள் தாங்களும் அதை ஒரு இன்னுமொரு போராட்டங்கள் போன்ற ஒரு போராட்டங்களை நடத்தி நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும் அதனுடைய வலுவையும் குறைப்பதற்கான சில வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம். எனவே அவைகள் தவிர்க்கப்பட வேண்டும், நிறுத்தப்பட வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் தான் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும் என்றதையும் நாங்கள் கூறிக்கொள்வதுடன்,

25 ஆம் தேதி நேற்றைக்கு நேற்றையக்கு முதல் நாள் காணாமல்போனோர் அலுவலகம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலானது உள்ளக பொறிமுறைக்குள் காணாமல்போனோர் அலுவலகத்தின் ஊடாக இழப்பீடு வழங்குதல் மற்றும் காணாமல் போனவர்களுக்கான சான்றிதலை வழங்குவது தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த ஏற்பாட்டிற்காக அதிகமான நபர்கள் வாகனங்கள் மூலமாக அந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள் அல்லது சென்றிருந்தார்கள்.

அந்த நேரத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் உறவுகளானவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இந்த ஜனநாயக நாட்டில் இந்த மாதிரியான சர்வதேச நீதி வேண்டி போராடிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், இலங்கை அரசாங்கமானது காணாமல்போனோர் போன்ற அலுவலகங்களுக்கு ஊடாக காணாமல் ஆக்கியோர் மற்றும் காணாமல் போனோர் இரு தரப்பையும் ஒன்றாக இணைத்துக்கொண்டு உள்ளக பொறிமுறைக்குள் அந்த பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக்கொள்கின்றது

காணப்பட்டோர் அலுவலகம் அதாவது காணாமல்போனோர் அலுவலகத்தின் மூலம் எந்தவொரு சட்ட ஏற்பாடுகளோ அல்லாட்டி போனால் பொறுப்புகூறலோ இல்லாத ஒரு இடத்தைத்தான் அந்த ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு கீழ்தான் அந்த காணாமல்போனோர் அலுவலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது. எனவே அந்த காணாமல்போனோர் அலுவலகத்தினுடைய செயல்பாடு எம்மைப் பொறுத்தவரையில் ஒரு கண்துடைப்பு.

சர்வதேசத்துக்கு ஒரு நாடகமாகத்தான் அது அவர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையான பொறுப்புகூறலும் அந்த சட்டத்தின் பிரகாரம் இந்த காணாமல் ஆக்குதலை செய்தவர்களுக்குரிய சட்ட நடவடிக்கைகள் அல்லது அவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான எந்தவொரு ஏற்பாடும் இலங்கை அரசின் சட்ட திட்டங்களுக்குள் இல்லாதிருப்பதன் காரணத்தினால் நாங்கள் இந்த உள்ளக பொறிமுறையை வேண்டாம் என்பதனை தெளிவாக கூறி நிற்கின்றோம்.

அந்த வகையில் சர்வதேச நீதி பொறிமுறை தான் இந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வாக இருக்கும் என்பதனையும் வலியுறுத்திக்கொண்டு, 30 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை மிகவும் சிறப்பான முறையில் அவர்களோடு நினைத்தது போன்ற ஒரு ஏற்பாடு நடைபெறுவதற்கு எல்லோருடைய ஆதரவும் அந்த மாநாட்டுக்கு இருக்க வேண்டும் என்பதனையும், அன்றைய தினம் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு இந்த இந்த மாதிரியான மோசமான ஒரு செயல்பாட்டை செய்த பொறுப்பு வாய்ந்த அரசாக இருக்கின்ற ஸ்ரீலங்கா அரசின் அரசின் கடந்த கால போக்கினையும் கண்டித்துக்கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச நீதி கிடைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து சேர்ந்து கட்சி பாரபட்சம் இல்லாமல் எல்லோரும் அனைத்து தரப்பினரும் இளையோர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள், சமயத் தலைவர்கள், விளையாட்டு கழகங்கள், மாதர் சங்கங்கள் அனைத்து தரப்பினரும் அந்த இடத்துக்கு வந்து தங்களுடைய இந்த மாநாட்டுக்கு பலி சேர்க்குமாறு சிவில் சமூகம் சார்பாக நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல் அன்றைய தினம் மாநாட்டுக்கு முன்னதாக காலை 9:00 மணி அளவில் பேரணி ஒன்று நடைபெற இருக்கின்றது. அந்த பேரணியானது தந்தை செல்வா கலையரங்கில் சென்றடையும். அந்த பேரணிக்கு பிற்பாடு மாநாடு தொடங்கும். அந்த மாநாட்டில் இரண்டு விதமான புத்தகங்களும் வெளியிடப்பட இருக்கின்றது.

இதுவரையில் 600க்கும் மேற்பட்ட தாய்மார் தங்களது உயிரை தியாகம் பண்ணியிருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் சர்வதேச நீதி கேட்டு போராடி எந்தவொரு நீதியும் கிடைக்காமல் அவர்கள் உயிரை விட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்களுடன் அவர்களுடைய போராட்ட வரலாறு ஒரு புத்தகமாக வெளியிடப்பட இருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியான மாநாடு கருத்தாடல்கள் போன்ற பல நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றது. அதன் பிற்பாடு மதியத்திற்கு பின்னர் காட்சிப்படுத்தல் இருக்கின்றது.

அந்த கண்காட்சியில் பலவிடப்பட்ட தடயங்கள் அதாவது காணாமல் ஆக்கப்பட்டோர் இறுதியாகவும் அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அவர்களுடைய ஞாபகமாக அவர்கள் இன்னொன்றுக்கு தங்கள் குடும்பத்தவர்களுக்கு வழங்கிய நினைவுப் பொருட்கள் என்பனவும் காட்சிப்படுத்த இருக்கின்றது.

எனவே அன்றைய தினத்தினை மிகச் சிறப்பான வகையில் அழுத்தம் திருத்தமாக சர்வதேச நீதி மூலமாகத்தான் நாங்கள் இந்த நீதியை பெற்றுக் கொள்ளலாம் என்பதனை சர்வதேசத்திற்கு தெரிவிக்கும் முகமாக அனைவரும் இதில் பங்கு கொண்டு அந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு எல்லோரையும் தயவாக மட்டக்களப்பு சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

நீண்ட காலமாக இதில் ஒரு சிலர் வந்து சர்வதேச நீதிக்கு புறம்பான ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் உண்மையிலேயே நான் நினைக்கிறேன் சென்ற காலங்களில் அவர்கள் சில ஒரு சில சர்வதேச அமைப்புகள் மற்றும் இலங்கை அரசாங்கம் நடத்திய மாநாடுகளில் கலந்து இருக்கிறார்கள்.

உள்ளக பொறிமுறைக்கு, அதாவது ழுஆP அலுவலகத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும் என்றெல்லாம் கோரியவர்கள் எல்லாம் சேர்ந்து இதற்கு ஒரு இதற்கு ஈடானதா அல்லது இதனை மழுங்கடிப்பதற்காகவோ அல்லது இதனுடைய தார்ப்பரியத்தை குறைப்பதற்காகவோ சில போராட்டங்களை நடத்துவதற்கான முயற்சியும் நடைபெறுகின்றது.

இலங்கை அரசாங்கமானது இதேபோன்று பல செயல்பாடுகளை செய்விக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்களும் இலங்கை அரசாங்கத்தின் உள்ளக பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள் துரதிர்ஷ்டவசமானது.

ஆனால் உண்மையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் பொறுப்பு வாய்ந்த அரச துருப்புகளிடம் கையளிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது சுற்றிவளைப்புகளின் போது ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். எனவே குற்றவாளிகளிடம் நாங்கள் நீதியை எதிர்பார்க்க இயலாது. அதனாலதான் நாங்கள் சர்வதேச நீதியை கேட்டு நிற்கின்றோம்.

இந்த மாதிரியான தரப்புகள் அந்த உண்மையை நீதியை விளங்கிக் கொள்ளாத ஒரு தரப்பாக அரசினுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் இருந்து செயல்படுவது என்பதனை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதேபோல நான் இன்னுமொரு கண்டனத்தை தெரிவித்துக் கொள்ள இந்த இடத்தில் விரும்புகிறேன். சென்ற 25 ஆம் தேதி ழுஆP அலுவலகம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் பொலிசார் மிகவும் மோசமாகவும் மிலேச்சத்தனமாகவும் நடந்து கொண்டார்கள்.

அங்கிருந்த பெண்களை வந்து தரதரவென இழுத்து வரப்பட்டு வெளியில் விட்டு கேட்டை சாத்தியதும், பதாகைகள் இழுத்து கிழித்தெறியப்பட்டதே கண்ணால் பார்க்கக்கூடியதாக இருந்தது.

எனவே இந்த மாதிரியான அரச இயந்திரங்களாக இருந்து செயல்பட்ட பொலிசார்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனவே அந்த மாதிரியான செயல்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஏனென்றால் அவர்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர். அவர்களுடைய உறவினர்களை பொறுப்பு வாய்ந்த அரசில் இருந்த தரப்பு அழைத்துக்கொண்டு போய் விசாரணை செய்துவிட்டு விடுவோம் என்று அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதுவரைக்கும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. எனவே அவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு தரப்பாக இருக்கும் இந்த நேரத்தில், அவர்கள் மீது மிலேச்சத்தனமாக மிகவும் மோசமாக பொலிசார் நடந்த செயல்பாட்டினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

Untitled

யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தைக் குழப்ப முயற்சி… – சிவயோகநாதன்

August 28, 2026

ர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக

default (51)

இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; ஸ்கார்பரோ சென்டர்-டான் வேலி ஈஸ்ட் தொகுதி மக்களுக்குச் சேவையாற்றும் எனது பணியிலிருந்து இது என்னை பின்வாங்கச் செய்யாது.”-சல்மா ஜாஹித்

August 28, 2026

நேற்றிரவு தனது இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கனடாவின் ஸ்கார்பரோ சென்டர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்

bea

அழகு நிலையத்தில் 7 கோடி ரூபா ஹெரோயின்: தம்பதியினர் கைது!

August 28, 2026

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய்

mark carney55

லிபரல் கட்சி எம்.பி.யைக் குறிவைத்து நடத்தப்பட்ட தீவைப்புச் சதி ஒரு ‘கோழைத்தனமான’ அச்சுறுத்தல் செயல்: கார்னி கண்டனம்

August 28, 2026

ஒட்டாவா — தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் திட்டமிட்ட தீவைப்புச் சதி நடந்திருப்பதாகக் கூறியுள்ள கனடியப் பிரதமர்

Dead

மரத்தில் இருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு

August 28, 2026

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் தோட்டதில் மரம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். சுமார்

nap

நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 389 ஆக உயர்வு

August 28, 2026

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில மணி நேரங்களுக்கு

default (50)

லிபரல் கட்சி எம்.பி.யின் வீட்டில் கார்கள் கொளுத்தப்பட்ட சம்பவம்: தீவைப்புச் சதியா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை

August 28, 2026

ஸ்கார்பரோ சென்டர் தொகுதி எம்.பி. சல்மா ஜாஹித்தின் காரும், அருகிலிருந்த வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டதை அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது. ஸ்கார்பரோ

HPgenfsb0AEZu1o

“கடந்த 6 ஆண்டுகளில் தி.மு.க.வில் நடந்ததைச் சொல்லட்டுமா?” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ ராஜாவின்

1200-675-27496391-thumbnail-16x9-cmvijay

சட்டப்பேரவை மரபை மாற்றிய முதலமைச்சர் விஜய்: சக அமைச்சர்களுடன் அமர்ந்து நிகழ்வுகளைக் கவனித்த சுவாரஸ்யம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனக்கென ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கையில் அமராமல், சக அமைச்சர்களுடன்

1200-675-27498226-thumbnail-16x9-pinhole

உலகின் முதல் நுண்துளை கருவிழி சீரமைப்பு மையம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

August 27, 2026

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், உலகின் முதல் ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ (Pinhole Pupilloplasty –

photo-collage.png

செம்மணி மனிதப் புதைகுழி; ஐ.நா விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர்

August 27, 2026

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைகள் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள்

rum

ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்கவுக்கு மீண்டும் முதலிடம்

August 27, 2026

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக்