யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தைக் குழப்ப முயற்சி… – சிவயோகநாதன்

ர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும் அதனுடைய வலுவையும் குறைப்பதற்கான சில வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம். எனவே அவைகள் தவிர்க்கப்பட வேண்டும், நிறுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் சபாரெத்தினம் சிவயோகநாதன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இந்த ஊடக […]

இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; ஸ்கார்பரோ சென்டர்-டான் வேலி ஈஸ்ட் தொகுதி மக்களுக்குச் சேவையாற்றும் எனது பணியிலிருந்து இது என்னை பின்வாங்கச் செய்யாது.”-சல்மா ஜாஹித்

நேற்றிரவு தனது இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கனடாவின் ஸ்கார்பரோ சென்டர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) சல்மா ஜாஹித் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது: “நேற்றிரவு எனது இல்லத்தில் ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எனது காரையும், மற்றொரு வாகனத்தையும் தீவைத்து கொளுத்தியுள்ளார். தீப்பற்றி எரிவதை எனது மகன் கவனித்த உடனடியாக நாங்கள் அவசர உதவி எண்ணான 911-ஐத் தொடர்பு […]

அழகு நிலையத்தில் 7 கோடி ரூபா ஹெரோயின்: தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, குறித்த அழகுநிலையைத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. மாத்தறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன விஜேசேகரவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் […]

லிபரல் கட்சி எம்.பி.யைக் குறிவைத்து நடத்தப்பட்ட தீவைப்புச் சதி ஒரு ‘கோழைத்தனமான’ அச்சுறுத்தல் செயல்: கார்னி கண்டனம்

ஒட்டாவா — தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் திட்டமிட்ட தீவைப்புச் சதி நடந்திருப்பதாகக் கூறியுள்ள கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), சமூக வலைதளப் பதிவொன்றில் இதனை “வன்முறை மற்றும் அச்சுறுத்தலின் கோழைத்தனமான செயல்” என்று சாடியுள்ளார். ஸ்கார்பரோ சென்டர்-டான் வேலி ஈஸ்ட் (Scarborough Centre-Don Valley East) தொகுதியின் லிபரல் கட்சி எம்.பி.யான சல்மா ஜாஹித் (Salma Zahid) வெளியிட்டுள்ள அறிக்கையில், நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது தனிப்பட்ட […]

மரத்தில் இருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் தோட்டதில் மரம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 35 அடி உயரமுள்ள குறித்த மரத்தில் ஏறி அதன் கிளைகளை வெட்ட முற்பட்ட போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தவறி வீழ்ந்தவர் பலத்த காயங்களுடன் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மரங்களை வெட்டுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தக்காரரின் கீழ் குறித்த நபர் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 389 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 389 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, நேபாள இராணுவம், ஆயுதப் பொலிஸ் படை மற்றும் தேசிய பொலிஸைச் சேர்ந்த 13,000க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். […]

லிபரல் கட்சி எம்.பி.யின் வீட்டில் கார்கள் கொளுத்தப்பட்ட சம்பவம்: தீவைப்புச் சதியா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை

ஸ்கார்பரோ சென்டர் தொகுதி எம்.பி. சல்மா ஜாஹித்தின் காரும், அருகிலிருந்த வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டதை அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது. ஸ்கார்பரோ (Scarborough) தொகுதி எம்பியின் வீட்டில் வியாழக்கிழமை அதிகாலை பல கார்கள் தீக்கிரையாக்கப்பட்டதை அடுத்து, இது திட்டமிட்ட தீவைப்புச் சதியா என்ற கோணத்தில் டொரொண்டோ காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது. ஸ்கார்பரோ சென்டர்-டான் வேலி ஈஸ்ட் (Scarborough Centre-Don Valley East) தொகுதி எம்பி சல்மா ஜாஹித் (Salma Zahid) வியாழக்கிழமை […]