சென்னை:
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் தவெக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், அமமுக எம்.எல்.ஏ காமராஜின் ஆதரவு கடிதம் தொடர்பாகப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தனது கட்சி எம்.எல்.ஏ காமராஜ் அதிமுக-விற்குத்தான் ஆதரவு கடிதம் கொடுத்தார் என்றும், தவெக காட்டிய கடிதம் போலியானது என்றும் ஆளுநரிடம் புகார் அளித்தார். இதற்குப் பதிலடியாகத் தமிழக வெற்றிக் கழகம் தற்போது அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் தான் முழு சுயநினைவுடன் தவெக-விற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி கடிதத்தில் கையெழுத்திடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து தவெக தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “அமமுக எம்.எல்.ஏ காமராஜ் தனது முழு விருப்பத்துடனும், டி.டி.வி. தினகரனின் ஒப்புதலுடனும் தான் ஆதரவு கடிதம் எழுதினார். இப்போது அவர் பொய் கூறுகிறார். யாரிடமும் குதிரை பேரம் பேச வேண்டிய அவசியம் தவெக-விற்கு இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எம்.எல்.ஏ காமராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அந்தக் கடிதத்தில் இருப்பது தனது கையெழுத்து அல்ல என மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ ஆதாரம் வெளியானதால், அமமுக மற்றும் தவெக இடையே நிலவும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
#TVK #TTVDhinakaran #AMMK #MannaigudiMLA #PoliticalDrama #BreakingNews #May9 #TamilNaduPolitics #VijayAsCM #FakeLetterIssue #CCTVProof #HorseTrading #StalinVsVijay #EPS #ElectionResults2026 #NewGovernmentTN #AssemblyCrisis #TamilNews #VijayMakkalIyakkam #PoliticalControversy_