மார்ச் 30; குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை (9) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நீதவான் ரி.பிரதீபனால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குருக்கள்மடம் மனிதப் புதைகுழி முதலாம் கட்ட அகழ்வுப்பணிகள் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இவ்வழக்கில் ஆஜரான சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவரகள் தொடர்பான வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பாரியதொரு திருப்புமுனையையும் ஒரு முன்னேற்றத்தையும் நாங்கள் அடைந்திருக்கிறோம்.

இந்த வழக்கு, விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது ஏற்கனவே இந்த குறிப்பிட்ட அகழ்வுப்பணிக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டிருந்ததோடு, காலநிலையும் ஒரு தடையாக இருந்தது.

இந்நிலையில், தற்போது காலநிலை சீராக உள்ளதால் அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான பணத்தை செலவழிக்கின்ற அதிகாரமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் இந்த வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான கட்டளையை நீதவான் பிறப்பித்திருக்கிறார்.

இது தொடர்பான சட்ட வைத்திய அதிகாரிகள், அதற்குரிய ஆராய்ச்சி நிபுணர்கள் அனைவருடைய கலந்துரையாடலின் பிற்பாடு இந்த திகதி தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மார்ச் 30ஆம் திகதி முதற்கட்ட அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்கிற செய்தியினை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

30ஆம் திகதி குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கையாக, இந்த புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக, களுவாஞ்சிக்குடியின் பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்ததன் பின்னர் மார்ச் 30ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக குரலற்றவர்களின் குரல்கள் இயக்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

முடிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை, நீதிமன்றங்கள் நீதியை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது என சட்டத்தரணி றாஸீ முஹம்மத் முஹம்மத் இதன்போது தெரிவித்தார்.

MAr

நாட்டில் நிலக்கரி ஊழலால் மின்சாரக் கட்டணமும் உயரும் அபாயம் – எஸ்.எம். மரிக்கார்

March 10, 2026

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் அரசாங்கம்

Nam

அரசு முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாதமையே இன்று நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குக் காரணம்!

March 10, 2026

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது

nal

2016 பின் அரச சேவையில் இணைந்த அனைவருக்கும் ஓய்வூதியம்!

March 10, 2026

2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்த அனைத்து அதிகாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார

Yogarasa

திருச்சி முகாமில் ஈழத்தமிழர்; உண்ணாவிரதப் போராட்டம்!

March 10, 2026

திருச்சி சிறப்பு முகாமில் கடந்த முதலாம் திகதியிலிருந்து இன்றுவரை தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஈழத்தமிழரான யோகராசா நவநாதன்

Death-2

மூன்று பிள்ளைகளின் தந்தை தற்கொலை: இளவாலையில் சம்பவம்

March 10, 2026

யாழில், தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(9.3.2026) இடம்பெற்றுள்ளது. டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச்

an

ஜனாதிபதியுடன் தேரர்கள் விசேட கலந்துரையாடல்

March 10, 2026

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான இத்தேபானே

ve

கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மணல் விலை அதிகரிப்பு

March 10, 2026

மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது என தெரிவித்த வடக்கு மாகாண

kur

மார்ச் 30; குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

March 10, 2026

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ding

உப்பாறு பகுதியில் 18 டிங்கி படகுகளுடன் இருவர் கைது

March 10, 2026

திருகோணமலை, உப்பாறு பகுதியில் மகாவலி கங்கையை அண்டி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 18 டிங்கி படகுகளுடன் இரு சந்தேக

yo

மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷிதவுக்கு அதி குற்றப்பத்திரிகை

March 10, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார் வங்கி கணக்கொன்றில், 17 மில்லியன் ரூபாய் பணம்

sara

யாழ்.சரவணையில் ஆலயச் சிலை உடைப்பு

March 10, 2026

யாழ்ப்பாணம், சரவணை பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் சிலையினைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்துத்

au

ஈரானிய வீராங்கனைகளுக்கு அவுஸி.பொலிஸார் உதவி

March 10, 2026

ஈரான் பெண்கள் கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஐவருக்கு அடைக்கலமளிக்கப்படுவதற்கு முன்பாக அவர்களை அணி ஹொட்டலிலிருந்து அவுஸ்திரேலிய பொலிஸார் மீட்டெடுத்ததாக அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு