சென்னை
தமிழ்நாட்டின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான செயல்திட்டங்களை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
முதலமைச்சருடன் 30 நிமிட ஆலோசனை:
மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான ‘வருவாய் அதிகரிப்பு குழு’ (Revenue Augmentation Committee) முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தது. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப வருவாயைச் சீரமைப்பது மற்றும் நிதி வள ஆதாரங்களை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
உயர்மட்டக் குழுவின் முக்கியப் பணிகள்:
-
மாநிலத்தின் சொந்த வரி வருவாயை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்குதல்.
-
வரி ஏய்ப்பு மற்றும் வருவாய் இழப்புகளைத் தடுக்கும் நிர்வாக மற்றும் தொழில்நுட்பச் சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தல்.
-
அரசுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளைப் பயனுள்ள முறையில் பணமாக்குவது, பொதுத்துறை நிறுவனங்களின் லாபப் பங்குகளை அதிகரிப்பது, பயனாளர் கட்டணங்களை மறுஆய்வு செய்வது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளித்தல்.
குழுவின் முக்கிய உறுப்பினர்கள்:
மான்டேக் சிங் அலுவாலியா தலைவராக உள்ள இக்குழுவில், பொருளாதார நிபுணர் டாக்டர் கே.பி. கிருஷ்ணன், வரிக் கொள்கை நிபுணர் அர்பிந்த் மோடி, முன்னாள் சிபிஇசி தலைவர் நஜிப் ஷா, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக், சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவன இயக்குநர் டாக்டர் எம். சுரேஷ் பாபு ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு:
இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தின் போது தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் என். மேரி வில்சன், தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
#ChiefMinisterVijay #ThalapathyVijay #MontekSinghAhluwalia #RevenueAugmentation #TNEconomy #TVKGovernment #TamilNaduNews #Chennai #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates