மஹர சிறைச்சாலை தற்போதைய நிலவரம்…

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டது.

இதில் 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் கைதி ஒருவர் உயிரிழந்தார்.

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

அத்துடன், ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக விமானப்படையினால் பெல் 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பனவும் ஈடுபடுத்தப்பட்டன.

கைதிகளால் சிறைச்சாலையின் தலைமை சிறை கட்டுப்பாட்டாளரின் அலுவலகத்திற்கும் ஒழுக்கவியல் பிரிவிற்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், நேற்று பிற்பகல் சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு சென்ற போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலையினுள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

இதற்கமைய, உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடியதுடன், அங்கு அவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் சில பதற்றமான சூழலும் உருவானது.

எனினும், பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

சிறைச்சாலையினுளிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை ஒத்த சில சத்தங்கள் கேட்டதையடுத்து, கைதிகளைப் பார்வையிட வந்திருந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு செல்ல முற்பட்டதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், அச்சந்தர்ப்பத்தில் கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் பாதுகாப்புத் தரப்பினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் மஹர பிரதேசத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

அமைதியைப் பேணும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டதுடன், இதற்கமைய 246/கெந்தலியத்தபாலுவ – மேற்கு, 246/சீ கெந்தலியத்தபாலுவ – வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே, பதற்றநிலை நிலவிய மஹர சிறைச்சாலையின் சூழ்நிலையைப் பார்வையிடுவதற்காகப் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா மற்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஆகியோர் நேற்று இரவு மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகக் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில், பதற்றநிலையினால் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடி மஹர சிறைச்சாலைக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் சிறைச்சாலையினுள் தீவைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அந்நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை