கரந்தெனிய, தல்கவத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், முகநூல் (Facebook) நேரலையின் போது மரணமடைந்த சம்பவம் குறித்து கரந்தெனிய காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தினேஷ் விஜேவர்தன என அடையாளம் காணப்பட்ட உயிரிழந்த இந்த நபர், பல வருடங்களாக தென்கொரியாவில் பணிபுரிந்துவிட்டு அண்மையிலேயே இலங்கை திரும்பியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இச்சம்பவம் ஜூலை 12 ஆம் தேதி இரவு நிகழ்ந்துள்ளது. இந்த முகநூல் நேரலையின் போது, அவர் ஆரம்பத்தில் தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்ததைக் காண முடிந்ததாகவும், அதன் பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
119 அவசர உதவி இலக்கத்திற்கு கிடைத்த புகாரின் பேரில் விசாரணைகளைத் தொடங்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக எல்பிட்டிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.