பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கிறிஸ்எல்மோர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு வழங்கிய எழுத்துமூல பதிலில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
பிரிட்டன் செம்மணி மனித புதைகுழி தொடர்பான விடயங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றது.மேலும் நம்பகதன்மை மிக்க வெளிப்படையான விசாரணையின் அவசியம் குறித்து இலங்கையிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.
காணாமல்போனோர் குடும்பத்தினரின் அர்த்தபூர்வமான பங்களிப்பையும் வலுவான தடயவியல் வழிமுறைகளையும் விசாரணைகளுடன் இணைக்கவேண்டும்.
மனிதபுதைகுழி அகழ்வு தொடரும் நிலையில் சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை பரிசீலிக்கவேண்டும் என தெரிவித்துள்ளோம்.
பொறுப்புகூறல் நல்லிணக்கம் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் குறித்து இலங்கையுடன் பிரித்தானியா தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றது.
பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவுச்செயலாளர் கடந்த வருடம் இலங்கை பிரதமர் பிரிட்டனிற்கு விஜயம் மேற்கொண்டவேளை இது குறித்து கலந்துரையாடினார்.முன்னாள் துணை பிரதமர் 2026ம் ஆண்டு பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவேளையும் இது குறித்து பேச்சுக்களில் ஈடுபட்டார்.
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் காணாமல்போனோர் விவகாரம் குறித்து சமீபத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதுடன் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசினார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான முதன்மை குழுவிற்கான தலைமைத்துவம்இமற்றும் தற்போதைய ஐநா பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்கான ஆதரவுஇஆகியவற்றின் மூலம் இலங்கையில் உண்மை மற்றும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு ஆதரவளிப்பதில் பிரித்தானியா உறுதியுடன் உள்ளது என எல்மோர் தெரிவித்துள்ளார்.