முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு
11 முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (14) விளக்கமளித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலருக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தன. அந்தப் பட்டியலில் அசோக ரன்வல, முகமது ரிஸ்வி சாலி, சரத் குமாரா, அஜித் […]
பிரசன்ன ரணதுங்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (14) கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரசன்ன ரணதுங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, தனிப்பட்ட தேவை நிமித்தம் தனது கட்சிக்காரர் வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், தற்போது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்தில் […]
கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20% கட்டண திட்டத்தைக் கைவிட்டார் டிரம்ப்!

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20 சதவீதக் கட்டணத் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக, வளைகுடா நட்பு நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். முக்கிய உலகளாவிய எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான அமெரிக்காவின் செலவினங்களை ஈடுசெய்ய, 20% கட்டணம் விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். […]
முக்கிய அறிவித்தல்!
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தல் ஒன்றை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, தகுதியான பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரும் நடைமுறையானது இன்று (14) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி வரை இணையவழியில் (Online) மாத்திரமே மேற்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.donets.lk அல்லது onlineexams.gov.lk.eic […]
சிறை மோதலுக்குப் பின்னால் சதித்திட்டமா?

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயல்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தின் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகத்தினுள் நிறுவப்படும் புதிய சிறைச்சாலை மற்றும் காலி, மஹமோதர பழைய வைத்தியசாலையை புதிய சிறைச்சாலையாக மாற்றுவதற்கு அரசாங்கம் […]
79 வயதுடைய காணாமல் போன முதியவரைத் தேடிவரும் கியூபெக் மாகாண பொலிஸார்

செவ்வாய்க்கிழமை காணாமல் போன 79 வயதுடைய முதியவர் ஒருவரைக் கண்டறிய கியூபெக் மாகாண பொலிஸார் அவசரக் கால ‘சில்வர் அலர்ட்’ (Silver Alert) எச்சரிக்கையை விடுத்துள்ளனர். கியூபெக் மாகாண பொலிஸாரின் (Sûreté du Québec – SQ) கூற்றுப்படி, லூயிசெட் லம்பேர்ட் (Louisette Lambert) என்ற இந்த முதியவர், செவ்வாய்க்கிழமை காலை கியூபெக்கின் ட்ரம்மண்ட்வில் (Drummondville) பகுதியில் உள்ள மோரின் வீதி (Morin Street) பகுதியிலிருக்கும் தனது வீட்டிலிருந்து காரில் புறப்பட்டபோது கடைசியாகக் காணப்பட்டுள்ளார். அவர் தற்போதைய […]
வடக்கு எட்மன்டன் அடுக்குமாடி குடியிருப்புத் தீ விபத்தில் ஒருவர் பலி, பலர் காயம்

வடக்கு எட்மன்டன் (Edmonton) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையிலும் போக்குவரத்துத் தடைகள் ஏற்படக்கூடும் என எட்மன்டன் மாநகர சபை எச்சரித்துள்ளது. சம்பவ இடத்தில் பொலிஸாரும் அவசரக்கால மீட்புக் குழுவினரும் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை (ஜூலை 13) இரவு, 132 அவென்யூ (132 Avenue) மற்றும் 82 ஸ்ட்ரீட் (82 Street) சந்திப்பிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் வாகனம் ஒன்று மோதியதுடன், அங்கிருந்த […]
எஸ்கசோனியில் ஐந்து பேர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு: நோவா ஸ்கோஷியா ஆர்.சி.எம்.பி

இந்த மாத தொடக்கத்தில் நோவா ஸ்கோஷியாவின் (N.S.) எஸ்கசோனி (Eskasoni) பகுதியில் இடம்பெற்ற கடுமையான தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 4ஆம் திகதி அதிகாலை 12:30 மணியளவில் ‘மிக்கீஸ் லேன்’ (Mickeys Lane) மற்றும் ‘ஷோர் ரோடு’ (Shore Road) சந்திப்புக்கு அருகிலுள்ள வீதியில் ஆடவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். “பாதிக்கப்பட்ட ஆடவர் ஒரு நிகழ்வில் […]
விட்பி நீர்க்கரை நடைபாதை அருகே நடந்த வன்முறை -பாலியல் தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்

விட்பி (Whitby) பகுதியில் உள்ள ‘இரோகுவாஸ் பீச் பார்க்’ (Iroquois Beach Park) பூங்காவிற்கு அருகில், திங்கட்கிழமை இரவு பெண் ஒருவர் வன்முறையான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து, துர்ஹாம் பிராந்திய பொலிஸார் (Durham Regional Police) சந்தேகநபர் ஒருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நீர்க்கரை நடைபாதையிலிருந்து (Waterfront Trail) வடமேற்கு நோக்கி கார்டன் வீதியை (Gordon Street) நோக்கிச் செல்லும் மணல் பாதையில் பாதிக்கப்பட்ட பெண் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரவு 10:15 மணியளவில் […]
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “அரவணன்” நோய்த் தடுப்பு சிகிச்சை நிலையம் இன்று (14.07.2026) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “அரவணன்” நோய்த் தடுப்பு சிகிச்சை நிலையம் இன்று (14.07.2026) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டு வரும் “Paalam” the Bridge to Humanity, Australia அமைப்பின் நிதி அனுசரணையுடன், சுமார் 3 கோடி ரூபா செலவில் முதற்கட்டமாக இந்நவீன சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தேவைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், உயர்தர மருத்துவ வசதிகளையும் மனிதநேய […]